• Sep 21 2024

நயன்தாரா தனது திருமணத்தில் அணிந்திரிந்த சேலையில் கோவிலின் கட்டிடங்கள் அச்சிடப்பட்டிருந்ததா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக விளங்கி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நேற்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இவர்களுடைய திருமணமானது நேற்றைய தினம் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரெசார்ட்டில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இவர்களின் திருமணத்திற்கு சினிமா பிரபலங்களும், உற்றார் உறவினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இவர்களின் திருமணம் இந்து சமயத்தின் பாரம்பரிய முறைப்படி நடந்தது. கடவுள் நம்பிக்கை கொண்ட இருவரும் அடிக்கடி திருப்பதி போன்ற கோயில்களை தரிசித்து வருகின்றனனர்.

மேலும் திருமணத்தில் நயன்தாரா அணிந்திருந்த உடை தான் பலரது கவனத்தையும் ஈர்த்தது.திருமண உடைகள் புகழ்பெற்ற ஜேட் குழுமத்தால் இருவரின் விருப்பப்படி தனித்துவமாய் வடிவமைக்கப்பட்டன நயன்தாரா சிவப்பு நிற புடவை அணிந்திருந்தார்.

நவீன காலத்திற்கும் ஏற்றவாறு பாரம்பரிய வண்ணம் மாறாமல் வடிவமைக்கப்பட்ட அந்த புடைவையின் பார்டர்களில் ‌வரலாற்று சிறப்புமிக்க கொய்சாலா கோவிலின் கட்டிடங்கள் அச்சிடப்பட்டிருந்தது.இந்த பாரம்பரிய சிறப்பு மிக்க கோயில்களின் சிற்பங்கள்தான் நயன்தாராவின் சிவப்பு நிற திருமண ஆடையில் எம்ராய்டரியாக போடப்பட்டிருக்கிறது.

திருமண ஆடை குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியபோதே நயன்தாரா பாரம்பரிய சுவையுடன் கூடிய நவீன மயமான உடை அணியவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தாராம். பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு, ஜேட் குழுமத்தின் டிசைனர் மோனிஷா ஷாவிடம் பழங்கால கோயில்களின் கட்டிடக்கலை சாராம்சங்களைத் தழுவி திருமண ஆடை வடிவமைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

நயன்தாராவின் விருப்பத்திற்கேற்ப சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் சென்ற கொய்சாலா கோயில்களைப் பற்றி கூறினார் மோனிகா. இந்த பாரம்பரிய சிறப்பு மிக்க கோயில்களின் சிற்பங்கள்தான் நயன்தாராவின் சிவப்பு நிற திருமண உடையில் எம்ராய்டரியாக போடப்பட்டிருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement