• Sep 21 2024

அம்மாடியோவ் என்ன ஒரு அழகு-தங்க தாரகையாக மின்னும் நடிகை சிம்ரன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் இருந்து இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சிம்ரன். இவர் நேருக்கு நேர் என்னும் திரைப்படத்தின் மூலம் தனது கெரியரை ஆரம்பித்தார்.ஆட்டம் பாட்டம் என்று இவர் நடித்த அனைத்து படங்களிலும் செம டான்ஸ் போட்டு பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்.

நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள், வாலி, துள்ளாத மனமும் துள்ளும், ஜோடி, டைம் என்று 90களில் இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்த சிம்ரன். ஆஹா கல்யாணம் என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு துப்பறிவாளன், சீமா ராஜா, பேட்ட, மகான் போன்ற பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தார்.

தற்போது இவர் நடித்து வெளியான ராக்கெட்ரி திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அந்தகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்தப்படத்தை தியாகராஜன் இயக்கியுள்ளதோடு பிரசாந்த்,முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சமூகவலைத்தளத்தில் மிகவும் குறைவாக புகைப்படம் வெளியிடும் சிம்ரன், சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தங்க நிற புடவையில் தங்க தாரகையாக மின்னும் நடிகை சிம்ரன் ரசிகர்களின் கண்களுக்கு செம ட்ரீட் தான்.இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement