• Sep 20 2024

அழகில் இளைஞர்களை சுரண்டி இழுக்கும் நமீதா... என்ன ஒரு அழகப்பா...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை நமீதா ப்ரமோட். இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக 'டிராபிக்' என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாகத் தான் மலையாள சினிமாவில் கால் பதித்திருந்தார்.



அதனைத் தொடர்ந்து இவர் 'வேளாங்கண்ணி மாதாவு, என்றெ மானச புத்ரி, அம்மே தேவி' உள்ளிட்ட திரைத் தொடர்களிலும் நடித்து இருந்தார். அதுமட்டுமல்லாது இவர் 'குஞ்சாக்கோ போபனுடன் புள்ளிப்புலிகளும் ஆட்டின் குட்டியும்' என்ற மலையாளத் திரைப்படத்திலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கின்றார்.


அத்தோடு 'நிமிர்' என்ற படத்திலும் நடித்திருக்கின்றார். இவ்வாறாக விரல் விட்டு எண்ணக் கூடிய வகையில் ஒரு சில படங்களில் நடித்திருப்பினும் மலையாளத்தில் பலருக்கும் தெரிந்த ஒரு முகமாக மாறியிருக்கின்றார். இவரின் நடிப்பினைத் தாண்டி இவரது குழந்தைத் தனமான அழகிற்கும், சிரிப்பிற்கும் ரசிகர்கள் பலர் அடிமையாகி உள்ளனர்.



பட வாய்ப்புக்கள் இவருக்கு வந்து குவியாவிட்டமையினால் இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் தனது பொழுதைக் கழித்து வருகின்றார். அதில் தனது அழகிய புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களினைப் பதிவேற்றி வருவார். 


அந்தவகையில் தற்போதும் அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். அவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement