மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் டீவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஒருவரே நஷ்ரியா. பின்னர் இவர் பல மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் கால் பதித்தார். இவரின் குறும்புத் தனமான நடிப்புக்களாலும், கியூட் ரியாக்ஷ்னாலும் பல ரசிகர்களின் உள்ளத்தை வெகுவாக கவர்ந்தார்.
மேலும் தமிழில் 'ராஜா ராணி, நையாண்டி, நேரம், வாயை மூடிபேசவும்' என குறைந்தளவிலான படங்களையே அவர் நடித்திருந்தாலும் தன்னுடைய சிறந்த நடிப்பினால் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே தமிழ் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கினார்.
அதனைத் தொடர்ந்து அவர் தன் காதலனான நடிகர் பாஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். தன் திருமணத்திற்குப் பின் படங்களில் நடிப்பதை சில வருடங்களுக்கு நிறுத்தி வைத்திருந்தார். எனினும் அவ்வப்போது சில மலையாளப் படங்களில் வந்து முகம் காட்டிவிட்டுச் சென்றார். அதிலும் 'டிரான்ஸ்' என்ற மலையாளப் படத்தில் தன் கணவருடனே நடித்திருப்பார்.
இந்நிலையில் இவர் சினிமாவிற்குப் பின் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவேற்றி வருவார். அந்த வகையில் தற்போதும் கறுப்பு நிறத்தில் சல்வார் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.
Listen News!