• Nov 14 2024

என்ன கொடுமை சார் இது...8 வருடம் கழிச்சு ட்வீட்டுக்கு பிரேம்ஜி Reply .. இயக்குநர் பிரதீப் சொன்ன பதில்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

'கோமாளி' மற்றும் 'லவ் டுடே' ஆகிய இரண்டே திரைப்படங்களிலே தனக்கான அங்கீகாரத்தை மக்கிளிடம் இருந்து பெற்றவர் இளம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.

கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி' படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார்.இதில்  காஜல் அகர்வால், யோகிபாபு, சம்யுக்தா, கே. எஸ் ரவிக்குமார், பொன்னம்பலம் என பலர் நடித்து இருந்தனர். காமெடி டிராமாவாக உருவான இந்த படத்தை விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டினர். வசூல் ரீதியாகவும் கோமாளி படம் வெற்றியடைந்தது.

கோமாளி படத்தை தொடர்ந்து 'லவ் டுடே' படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். அத்தோடு அவரே இந்த படத்தில் நாயகனாகவும் நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.மேலும்  இவர்களுடன் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்க, கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகி இருந்தது. கடந்த நவம்பர் 4 ஆம் தேதி வெளியான லவ் டுடே திரைப்படம், மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் மட்டுமில்லாமல், தற்போது வரை பல கோடி ரூபாய் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகவும் மாறி உள்ளது.

அப்படி ஒரு சூழலில், கடந்த 2014 ஆம் ஆண்டு, பிரதீப் ரங்கநாதன் செய்திருந்த ட்வீட்டிற்கு பிரேம்ஜி அமரன் தற்போது அளித்துள்ள பதில், சமூகவலைத்தளத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது. குறும்படங்கள் இயக்கியும் நடித்தும் மெல்ல மெல்ல தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் பிரதீப் ரங்கநாதன்.

முன்னதாக, ஆரம்ப காலகட்டத்தில் குறும்படங்கள் எடுத்து வந்த சமயத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு எடுத்த ஷார்ட் ஃபிலிம் ஒன்றின் லிங்க்கை ட்விட்டரில் பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன், பிரேம்ஜி அமரனை டேக் செய்து, "சார், இது என்னுடைய ஷார்ட் ஃபிலிம். உங்களுக்கு பிடித்திருந்தால் எங்களுக்கு சப்போர்ட் செய்து Retweet செய்யுங்கள் சார்" என்றும் தெரிவித்துள்ளார்.

8 வருடங்கள் கழித்து இந்த ட்வீட்டை பகிர்ந்த பிரேம்ஜி அமரன், "சார் உங்களின் அடுத்த படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் சார், ப்ளீஸ் 🙏💚" என பதிவிட்டு இருந்தார். இதுகுறித்த ட்வீட், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது. அப்படி ஒரு சூழலில் பிரேம்ஜி அமரன் கருத்திற்கு பிரதீப் ரங்கநாதன் தற்போது பதில் அளித்துள்ளார்.

"சார். தேங்க் யூ சோ மச். இதை பதிவிட மனம் நிறைய வேண்டும். இது மிகவும் பெரிய விஷயம். 'என்ன கொடுமை சார் இது' என உங்களை சொல்ல வைக்க வேண்டுமென விரும்புகிறேன்.  😄❤️❤️❤️❤️" என பிரதீப் ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, தனது பழைய சமூகவலைத்தளத்தில்  பதிவுகள் இணையத்தில் வைரல் ஆனது தொடர்பாக விளக்கத்தையும் பிரதீப் ரங்கநாதன் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement