தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. 2000-களில் பிரபலமான 'சக்கலக்க பூம் பூம்' தொடரில் கருணா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார்.
மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2 உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள ஹன்சிகா மோத்வானி, நடிகர்கள் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார்.
இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் தனது நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வீடியோ கூட சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது.
திருமணம் முடிந்த பிறகும் நடிகை ஹன்சிகா மற்ற நடிகைகளை போல சினிமாவை விட்டு விலகாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதைப்போல திருமணம் முடிவதற்கு முன்பு எப்படி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியேட்டரோ அதைப்போலவே இப்போதும் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் , இவர் தற்போது பொம்மை போல உடை அணிந்துகொண்டு அட்டகாசமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மெழுகு டாலு நீ என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
Listen News!