இயக்குநர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் பருத்தி வீரன். இந்தத் திரைப்படம் கார்த்தி மற்றும் ப்ரியாமணிக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. இப்படத்தின் மூலம் தான் கார்த்தி தன்னுடைய கெரியரை ஆரம்பித்தார்.
அண்மையில் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதற்கு இயக்குநர் அமீரைக் கூப்பிடவில்லை என அமீர் வேதனையை வெளிப்படுத்தினார். மேலும், பருத்தி வீரன் படத்தால் தனக்கு 2 கோடிக்கும் மேல் கடன் உள்ளது.
சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தினருடன் தனக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. ஆனால், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் எங்கள் நட்பை கெடுத்துவிட்டார் என்று அமீர் கூறினார்.
அமீரின் இந்த குற்றச்சாட்டை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மறுத்து பேட்டி கொடுத்திருந்தார். அதில், அமீருக்கு அவ்ளோ சீன்லாம் இல்லை, அவர் தான் என்னை ஏமாற்றிவிட்டார். நந்தா படத்தில் இருந்து சூர்யா, அமீர் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. இதனால், அமீரின் முதல் படமான மெளனம் பேசியதே படத்தில் சூர்யா நடித்துக் கொடுத்தார். ஆனால் அமீர் இயக்குநர் ஆனதும் ரொம்பவே மாறிவிட்டார்.
அமீர் என்னிடம் பல லட்ச ரூபாய் கடன் வாங்கி திருப்பி கொடுக்க முடியாமல் போனதால், பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இயக்கி கொடுத்தார். அதேபோல், 2.75 கோடி பட்ஜெட்டில் ஃபர்ஸ்ட் காப்பி தருவதாக சொல்லிவிட்டு, இரண்டு ஆண்டுகளில் 4 கோடி வரை செலவு செய்து பருத்தி வீரன் படத்தை எடுத்தார் என அடுக்கடுக்கான புகாரை அமீர் மீது ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.
இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான சகிகுமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன். 'பருத்திவீரன்' இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை என தெரிவித்துள்ளார்.
Listen News!