• Nov 19 2024

மகனுக்காக நடிகை காஜல் அகர்வால் செய்த காரியம்- 9 மாத குழந்தையுடன் வைரல் போட்டோ!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் காஜல் அகர்வால். இவர் தமிழில் பழனி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவரது நடிப்பில் இறுதியாக   'ஹே சினாமிகா' படம் வெளியானது. 

தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் நடித்துள்ள கோஸ்டி எனும் படமும் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.


சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்சிலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது.


காஜல் அகர்வால் - கௌதம் கிட்ச்லு தம்பதியருக்கு கடந்த மாதம் (19.04.2022) அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 'நெய்ல்' என பெயரிட்டுள்ளனர். குடும்ப பெயரான கிட்ச்லு உடன் இணைத்து நெய்ல் கிட்ச்லு என இக்குழந்தை அழைக்கப்படுகிறது.


குழந்தை பிறந்து ஒன்பது மாதம் கடந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் அகர்வால் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். குழந்தை பிறந்து 9 மாதங்கள் கடந்த நிலையில் காஜல் அகர்வால், குழந்தைக்கு 3/4 பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி, குழந்தை பெயரில் உருவாக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கையும் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement