தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர்கள் விக்ரம் மற்றும் பிரசாந்த். இவர்கள் இருவரும் உறவினர்களாக இருந்தும் இன்றுவரை பேசுவதில்லை என்பது பலருக்கும் தெரிந்த ஒரு விடயம். விக்ரமிற்கும், பிரசாந்த்திற்கும் இடையில் ஒரு பனிப்போரே இடம்பெற்றிருந்தது எனக் கூறலாம். விக்ரமை பிரசாந்த் சினிமாவில் பின்னுக்கு தள்ள நினைத்தாகவும் ஒரு சில கிசுகிசுக்கள் வெளியாகி இருந்தன. இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பது குறித்து இதுவரை யாருக்குமே சரியாகத் தெரியவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் செய்யாறு பாலு இது குறித்த பல விடயங்களைக் கூறியிருக்கின்றார். அதாவது அதில் அவர் கூறுகையில் "தியாகராஜனின் சொந்த அக்கா மகன் தான் விக்ரம். விக்ரமினுடைய தந்தை வினோத் ராஜ் தான் பரமக்குடியிலிருந்து நடிக்க வந்து சினிமாவில் சான்ஸ் கிடைக்காமையினால் தனது மகனை தயார்படுத்தி தனக்குப் பதிலாக நடிகனாக்கினார்.
தன்னுடைய கனவை மகன் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக விக்ரமை ஹீரோவாக்கினார். இவ்வாறு விக்ரம் வளர்ந்து வரும் நேரத்தில் அவருக்கு விபத்தில் கால் உடைந்திருந்தது. அந்த சமயத்தில் தியாகராஜ் தான் பல தயாரிப்பாளருக்கு போன் பண்ணி அந்தப் பையனால் நடிக்க முடியாது, அவனால் எழுந்து நடக்க முடியாது என சொல்லி அவரின் பட வாய்ப்புக்களை தடுத்ததாக அந்தக் காலத்தில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.
அதுமட்டுமல்லாது போஸ்டர் சர்ச்சைகள் கூடி இருவருக்குமிடையில் நடந்திருக்கின்றது. அதாவது பிரசாந்தின் போஸ்டர் ஒட்டி இருந்தால் அதன் மேல் விக்ரமின் போஸ்டரை ஓட்டுவார்கள். ஆனால் இதெல்லாம் யார் பண்ணினது என்பது தெரியவில்லை எனவும் தெரிவித்திருக்கின்றார் செய்யாறு பாலு.
மேலும் சினிமாவில் யாருடைய வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது. அந்தளவிற்கு பல தடைகளையும் தாண்டி விக்ரம் வளர்ந்திருக்கார். இதனைப் பார்த்து அவரின் தாய் மாமன் தியாகராஜ் பூரித்துப் போகலாம், அல்லது அத்தைப்பையன் பிரசாந்த் மகிழ்ச்சியடையலாம். அந்த உறவு மறுபடியும் சேரலாம். அதேபோல் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படம் கூட நடிக்கலாம். சினிமாவில் எது வேணுமாவது நடக்கலாம்" எனவும் தெரிவித்திருக்கின்றார்.
அத்தோடு சினிமாவில் கடினஉழைப்பில் பிரசாந்தை அடிச்சுக்க யாராலும் முடியாது, மேலும் பிரசாந்தும் நிறைய விமர்சனங்களை தாண்டித் தான் நடிக்க வந்திருக்கார். அதில் முக்கியமான படம் 'ஜீன்ஸ்' எனவும் அந்தப் பேட்டியில் கூறி இருக்கார் செய்யாறு பாலு.
Listen News!