சாதாரண குடும்பத்தில் பிறந்து ஒருவர் பிரபலம் ஆவதென்பது சாதாரணமான விடயமில்லை. அப்படி சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று பிரபலமாக இருப்பவர்தான் அறந்தாங்கி நிஷா.
விஜய் தொலைக்காட்சியில் போகும் காமடி நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் நிஷா இருப்பார். இப்படி பிரபலமாகவும் பார்க்க ஜாலியாக இருக்கும் நிஷாவிற்கு பின்னால் பல சோகமான கதைகள் இருக்கின்றமை அனைவரும் அறிந்தது.
இந்த நிலையில் Youtube ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் மிகவும் கவலைப்பட்டு பேசியுள்ளார் நிஷா.அதில் தான் பட்டிமன்ற பேச்சாளராக இருக்கும்போது எமது பகுதியான அறந்தாங்கியை சுற்றியுள்ள பல பகுதிகளுக்கும் சென்று பேசியிருக்கிறேன் அந்த மேடைகளை பயன்படுத்தித்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.
அப்படி என்னை வளர்த்துவிட்ட எனக்கு உணவளித்த இந்த பகுதிகள் புயலால் பெரும்u அழிவை சந்தித்தது, அப்போது நானும் பாதிக்கப்பட்டிருந்தேன், எனது வீட்டில் குடிக்க தண்ணீர் இல்லை, எனது பிள்ளைக்கு ஜொரம் (காய்ச்சல்) வைத்தியசாலைக்கு கொண்டு செல்லமுடியவில்லை, கார் வெளியில் எடுக்க முடியாது மின்கம்பங்கள் விழுகிறது இப்படி இருந்தும் எனக்கு சாப்பாடு போட்ட மக்களுக்கு எதாவது செய்யவேண்டும் என நான், எனது கணவர், பிள்ளையென தனியாக சென்றோம் அவர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்பதற்காக.
அப்போது பலரிடம் உதவி கேட்டோம் ஒருவர் கமெண்ட் போடுறார் என்னக்கா பிச்சை எடுக்கிறீங்க என அப்போ நாங்கள் எந்த உதவியும் செய்யக்கூடாத பெரிய தலைவர்கள் செய்தால்தான் ஏற்றுக்கொள்வீர்களா எங்களின் நன்றி கடன்களை செய்ய விடமாட்டீர்களா என கவலையுடன் தெரிவித்திருந்தார்.
மேலும் நான்கு நாட்களாக மக்களுக்கு உதவி செய்தோம், நாங்கள் சாப்பிடவும் இல்லை, எனக்கு வயிற்று வலி இப்படி இருக்கும்போது ஒருவன் கேட்க்கிறான் செம பப்ளிசிட்டி, இதற்குதானே ஆசைப்பட்டீர்கள் என, இந்த பப்ளிசிட்டியை வைத்து நான் என்ன Cm ஆகப்போறேனா ஏன் இப்படி இருக்கிறார்கள், இது எனக்கு மிகவும் கசப்பான அனுபவம் என்றார் நிஷா.
Listen News!