• Sep 20 2024

வியக்க வைக்கும் சில மனிதர்களுடன் அந்த அற்புதமான இரவு!- மாமன்னன் இசை வெளியீட்டு விழா போட்டோஸ்- கீர்த்தி சுரேஷ் போட்ட பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!


பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே வெற்றிவாகை சூடிய இவர் அடுத்ததாக தனுஷுடன் கூட்டணி அமைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தது.


இதையடுத்து உதயநிதி உடன் கூட்டணி அமைத்தார் மாரி செல்வராஜ். இவர்கள் கூட்டணியில் தற்போது மாமன்னன் திரைப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் வில்லனாக பகத் பாசிலும், முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலுவும் நடித்திருக்கின்றார்கள்.


மாமன்னன் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பதோடு இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். அண்மையில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி எல்லாம் கொண்டாடி இருந்தார்கள். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.இதில் இயக்குநர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் , வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஏ.ஆர் ரகுமான் மற்றும் வீரந்தினராக அழைக்கப்பட்ட கமல்ஹாசன் எனப் பலரும் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement