• Sep 20 2024

திருமணம் செய்ய என்ன தகுதி வேண்டும்? ரசிகர் கேட்ட கேள்விக்கு நச் என பதிலளித்த அமலாபால்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் அமலாபால்.

இதனைத் தொடர்ந்து மைனா, தலைவா, தெய்வ திருமகள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தமிழைத் தவிர மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கின்றார்.

இவர் கடந்த 2014 ம் ஆண்டு டைரக்டர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் இரண்டு ஆண்டுகளிலேயே அவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ஆடை போன்ற சர்ச்சைக்குரிய படங்களில் நடித்து கடுமையான விமர்சனங்களைப் பெற்றார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் நேற்று ரசிகர்கள் உடன் இன்ஸ்டாவில் உரையாடிய அவர் பல கேள்விகளுக்கு பதில் கூறினார்.

"உங்களை திருமணம் செய்துகொள்ள என்ன தகுதி வேண்டும்?" என ஒரு ரசிகர்கள் கேள்வி கேட்க, "அதை நானே கண்டுபிடிக்கவில்லை, உண்மையாக தான். நான் என்னையே புரிந்துகொள்ளும் பயணத்தில் இருக்கிறேன். அதை நான் கண்டுபிடித்தபின் கண்டிப்பாக சொல்கிறேன்" என அமலா பால் கூறி இருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement