தமிழ் சினிமாவில் 90களில் காமெடி நடிகராகவும், வில்லன் போன்ற குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவர் தற்பொழுது பத்திரிக்கையாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.இவர் அவ்வப்போது பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்.
இவர் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை வெளியிடுவதால் இவரது youtube தளத்தை முடக்க வேண்டும் என்றும், இவரை கைது செய்ய வேண்டும் என சில பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர். சமீபத்தில் கூட இயக்குநர் பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த 'இரவின் நிழல்' படத்தில் அரை நிர்வாணமாக நடித்த, நடிகை ரேகாவை இவர் விமர்சித்ததற்காக, திருவான்மியூர் கடற்கரையில் ஜாகிங் சென்ற பொது, பொது வெளியில் நேருக்கு நேராக சண்டை போட்ட வீடியோக்கள், சமூக வலைதளத்தில் படு வைரல் ஆகியது.
திரைப்படத்தை தாண்டி பயில்வான் ரங்கநாதன் பலரை தனிப்பட்ட முறையிலும் விமர்சனம் செய்து வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக இசை வெளியீட்டு விழா முதல், செய்தியாளர் சந்திப்பு வரை அதில் கலந்து கொள்ளும் பிரபலங்களை சண்டை இழக்க தவறியது இல்லை. மேலும் பல பிரபலங்களை விமர்சனம் என்கிற பெயரில், வாய்க்கு வந்தவற்றை பேசி வருகிறார்.
சமீபத்தில் மீனாவின் கணவர் இறந்தது குறித்து பல்வான் ரங்கநாதன் பேசியது பலரையும் ஆதங்கப்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். பயில்வான் ரங்கநாதன் பேச்சு குறித்து, பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டர் பேட்டி ஒன்றில் மிகவும் கோபத்துடன் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில். "ஒரு நடிகரோ, அல்லது நடிகையோ… திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றால் அவர்களை பற்றி விமர்சனம் செய்து பேசுவது தவறு இல்லை. அவர்கள் சரியான நேரத்திற்கு ஷூட்டிங் வரவில்லை என்றால் அதைக் கேட்பதும் தவறு கிடையாது ஆனால் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பற்றி பேசுவது மிகவும் தவறான விஷயம்.அது அவர்களை மட்டும் காயப்படுத்தாமல், அவர்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள் உட்பட அனைவரையும் வேதனைப்படுத்தும் செயல், அப்படி ஒருவரை காயப்படுத்தி பேசுவதால் என்ன சந்தோஷம் கிடைக்கப் போகிறது,
நான் அது போல் யாரையும் பேச மாட்டேன், அதுபோன்று பேசுபவர்களின் youtube வீடியோவையும் பார்க்க மாட்டேன். அப்படி பேசுபவர்களை பார்த்தால் கோபம் தான் வரும். இப்படி ஒருவர் பற்றி அவதூறாக பேசி… நீங்கள் போடும் வீடியோக்களுக்கு நிறைய வியூஸ் வருவதால், அதிக பணம் கிடைக்கிறதா? மற்றவர்கள் குடும்பத்தை கஷ்டப்படுத்தி வர காசை வச்சு என்னதான் செய்யப் போறீங்க என பயில்வானை பங்கம் செய்துள்ளார் கலா மாஸ்டர்.
பிற செய்திகள்
- ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியல் கதாநாயகி ப்ரியாவை சல்வாரில் பார்த்திருக்கின்றீர்களா?- வேற லெவல் கிளிக்ஸ்
- பெரிய ரம்பா தொட போவியா- பிரபல காமெடியன் சொன்ன ஜோக்கால் விழுந்து விழுந்து சிரித்த மறைந்த நடிகர் விவேக்
- பங்களா வீடு, சொகுசு கார்.. மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
- கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜுற்கு வாங்கிக் கொடுத்த காரைப் பார்த்திருக்கின்றீர்களா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!