• Sep 20 2024

என்னடா சொல்லுறீங்க...லியோ படத்தில் விஜய்க்கு ஜோடி த்ரிஷா இல்லையா.? புரியாத புதிராக இருக்கும் லோகேஷ்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ், விஜய்யை வைத்து இயக்கி கொண்டிருக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த நாளிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் ரசிகர்களை குதூகலிக்க வைத்து வருகின்றன.

அதன்படி லோகேஷ் லியோ படத்திற்கு புதிது புதிதாக நடிகர்களை இணைத்துக் கொண்டே வருகிறார். அதனாலேயே யாரும் யோசிக்க முடியாத அளவிற்கு ஒவ்வொரு செய்திகளும் இப்படத்தை பற்றி வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் லியோ படத்தில் விஜய்க்கு ஜோடி த்ரிஷா என்று பேசப்பட்டு வந்த நிலையில் திடீரென்று அவர் இல்லை என்பது போல் தகவல் வந்திருக்கிறது.

மேலும் த்ரிஷா போலவே மற்றொரு நடிகையும் இப்படத்தில் இணைந்துள்ளார். அதாவது மடோனா செபஸ்டின் ஜோடியாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் விஜய் உடன் ஒரு பாடலில் ஆடுகிறார். அத்துடன் இவருக்கு 30 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்து படத்தில் நடித்து வருகிறார்.

இன்னொரு பக்கம் இப்படத்தில் ஹீரோகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத லோகேஷ், மடோனாவை விஜய்க்கு ஜோடியாக அமைத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லை என்றால் லியோ படத்தில் இரண்டு விஜய் இருப்பதால் ஒரு விஜய்க்கு த்ரிஷாவையும், மற்றொரு விஜய்க்கு மடோனாவையும் வைத்து இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

ஏற்கனவே இப்படத்தில் ஏகப்பட்ட நடிகர் நடிகைகள் இருப்பதால் எந்த மாதிரியான கதாபாத்திரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் என்று யூகிக்க முடியாத நிலையில், தற்போது மறுபடியும் இன்னொரு ஹீரோயின் வைத்து படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது. இதை பார்க்கும் பொழுது லோகேஷ் பெரிய தரமான சம்பவத்தை கொடுக்க இருக்கிறார் என்பது தெரிகிறது எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement