சினிமா உலகில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தமிழில் “பத்து தல”, “பொன்னியின் செல்வன் 2”, “அயலான்”, “லால் சலாம்”, “மாமன்னன்” போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதே போல் ஹிந்தியில் “கோட்சே காந்தி”, “மைதான்”, “பிப்பா” போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
அண்மையில் கூட “பத்து தல” திரைப்படத்தின் “நம்ம சத்தம்” என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
அது என்னவென்றால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் திரைப்படங்களில் பணியாற்றும் இயக்குநர்களோ தயாரிப்பாளர்களோ, ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்புகொள்வது மிக சிரமமாக இருக்கிறதாம்.
அவரை தொடர்புகொள்ள வேண்டும் என்றால் மும்பையில் ஒருவரை அழைத்து அங்கிருந்துதான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு போகுமாம்.
அதாவது ஏ.ஆர்.ரஹ்மான் தனது வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களின் மேலாண்மையை மும்பையை சேர்ந்த ஒரு ஏஜென்சியிடம் கொடுத்துள்ளாராம். எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, இயக்குநராக இருந்தாலும் சரி, சம்பள விஷயங்களிலிருந்து ஒப்பந்தம் செய்வது வரை எந்த விஷயமாக இருந்தாலும் மும்பையை சேர்ந்த ஏஜென்சியைத்தான் தொடர்புகொள்ள வேண்டுமாம்.
அந்த ஏஜென்சியை சேர்ந்தவர்கள் ஏ.ஆர்.ரஹ்மானை சந்திப்பது குறித்தான சரியான தேதியையும் நேரத்தையும் கூறுவார்களாம். அதன்பிறகுதான் சென்னையில் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானை சந்திக்கமுடியுமாம். இவ்வாறு ஒரு தகவல் வலம் வருகிறன்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!