• Sep 20 2024

காசுக்காக என்ன வேனா பண்ணுவீங்களா..மைனா நந்தினியின் இரண்டாவது கணவரை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டவரே நடிகை நந்தினி. அன்று முதல் இவர் ரசிகர்களால் மைனா நந்தினி என்று செல்லமாக அழைக்கப்பட்டு வருகின்றார்.இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் இணைந்து நடித்திருந்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்துப் புகழ் பெற்றிருந்தார். 

அதுமட்டுமல்லாது மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்திலும் நடித்திருக்கின்றார். அத்தோடு தற்போது வெளியாகியுள்ள 'விக்ரம்' படத்திலும் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருக்கின்றார்.



 இவர் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். இடையில் நடிகை மைனா சீரியல் நடிகரும், நடன இயக்குநராக யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது.ஆனால், மைனாவின் முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது



சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவார்.மைனா நந்தினியும் அவரது கணவர் இருவரும் சேர்ந்து மைனா விங்ஸ் என்ற பெயரில் யூடியூபில் தனியாக சேனல் ஒன்று நடத்தி வருகிறார். இதில் தன் கணவர் யோகேஷுடன் சேர்ந்து பல வீடியோக்களில் பல பொருட்களை ப்ரோமோஷன் செய்தும் வருகின்றனர்.

மேலும்  இப்படி ஒரு நிலையில் யோகேஷ், ரம்மி விளம்பரத்தில் நடித்துள்ள வீடியோ ஒன்று தற்போது இன்ஸ்டாகிராம் வைரலாக அதை பார்த்த இன்ஸ்டா வாசிகள் பலரும் அவரை ‘காசுக்காக என்ன வேனா பண்ணுவீங்களா, கேவலமா இல்ல ‘ என்று திட்டி தீர்த்து வருகின்றனர். 



ஆனால், உண்மையில் இந்த விளம்பரத்தில் அவர் பல மாதங்களுக்கு முன் நடித்து இருந்தார். ஆனால், ஒரு சிலருக்கு தற்போது அந்த விளம்பரம் இன்ஸ்ட்டாவில் வரவே அவரை தற்போது திட்டி தீர்த்து வருகின்றனர்.




Advertisement

Advertisement