உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாளி பிரமாண்ட வெற்றியை கொடுத்த படம் தான் விக்ரம். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படம் தென்னிந்தியத் திரைப்படங்களில் அதிக வசூலை செய்த படமாக இடம் பிடித்துள்ளது. மேலும் உலகளவில் ரூ.320+ கோடிக்கும் அதிகமான வசூலையும் வாரிக் குவித்துள்ளது.
இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக உலகநாயகன் கமல்ஹாசன் இயக்குநர், உதவி இயக்குநர், சூர்யா உள்ளிட்டோருக்குப் பரிசுகளை அளித்து வந்ததாக செய்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வந்தன.
இந்நிலையில் மாமனிதன் படத்திற்காக விஜய் சேதுபதியைச் சந்தித்துள்ள பத்திரிகையாளர்கள் அவரிடம் "கமல் உங்களுக்கு எந்த ஒரு பரிசையும் அளிக்கவில்லையா" எனக் கேட்டுள்ளனர்.
அதற்கு விஜய் சேதுபதி "அவருடன் நடிக்க வாய்ப்பு தந்ததே பெரிய பரிசு தான். எவ்வளவு பெரிய விஷயம்ங்க இது, நான் வாழ்நாளில் கற்பனை கூட செய்திராத விஷயம். இப்பிடியெல்லாம் நடக்கும் என நான் யோசித்துக் கூடப் பார்த்ததில்லை" எனப் பதிலளித்துள்ளார்.
இவரின் எந்த ஒரு தற்பெருமையும் இல்லாத அதிரடியான இப்பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.
பிற செய்திகள்
- மீண்டும் நயன்தாராவின் கழுத்தில் தாலி கட்டப் போகும் விக்னேஷ் சிவன்- இப்படி ஒரு முறை இருக்கா?
- லோகேஷின் அடுத்த படத்தில் கதாநாயகனாகும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன்- அப்போ விஜய் இல்லையா?
- பச்சை நிற சல்வார் அணிந்து ஏணியில் சாய்ந்த படி மௌனராகம் ஸ்ருதி நடத்திய போட்டோ ஷுட்- கியூட் கிளிக்ஸ்
- ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகிய ‘வீட்ல விசேஷம் திரைப்படத்தின் திரை விமர்சனம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!