சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அடிக்கடி தூண்டிய வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் ஜனனி "நாங்க ஒவ்வொருத்தரும் விருப்பம் இல்லாமல் தான் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தோம், ஆதிரை கல்யாணத்தில் என்னோட திட்டம் என்னவென்று விசாலாட்சி அத்தை கிட்ட சொல்லியாச்சு, இதில அவங்களோட உதவியும் அவசியம், ரூமில் கேமெரா வச்சும் சரியான நேரத்தில் உதவாமல் போய்டிச்சு.
அப்பத்தா கிட்ட இருந்து பிங்கர் ப்ரிண்ட் குணசேகரன் மாமா எடுக்கல என்றால் வேறு யாராக இருக்கும்" என நினைத்துப் புலம்புகின்றார். அந்தவகையில் அப்பத்தாவிடம் இருந்து ஜீவானந்தம் தான் பிங்கர் ப்ரிண்ட் எடுத்து செல்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.
Listen News!