பிக் பாஸ் ஆறாம் சீசன் பாதி நாட்களை கடந்துவிட்டது. ஆனால் தற்போது ஷோ எதிர்பார்த்த அளவுக்கு பரபரப்பு இல்லாமல் போரடிக்கும் வகையில் தான் சென்றுகொண்டிருக்கிறது என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் 50வது நாளில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்..
ராபர்ட் மாஸ்டர் குறித்து ரச்சித்தா மற்றும் கதிர் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது கதிர், ராபர்ட் மாஸ்டர் இருந்தது ஹேப்பியா இருந்தது என்றார். எனினும் இதற்கு ரச்சித்தா ஆமாம், இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில் இப்படி நபர் க்ராஸானது ஒரு நல்ல விஷயமா நினைக்கிறேன். இந்த வீட்டில் இருந்து தானே அவர் வெளியில் போய் இருக்காங்க, தாட்ஸ் அப்படியே இருக்கு என்றார்.
இந்த வீட்டில் போன் மற்றும் டிவி இல்லாததால் நாம் அதிக நேரம் அடுத்தவர்களுடன் பேசுகிறோம் இதனால் தான் ராபர்ட் மாஸ்டர் வெளியில் போனது கஷ்டமா இருக்கு வேற என்ன பண்றது இது தான் கேம் என்றார் கதிர்.
இதையடுத்து, பேசிய ரச்சிதா எனக்கு எப்படி இருக்குனா? 24/7 கேமரா என்னை பார்த்துகிட்டு இருந்துதோ இல்லையோ, ராபர்ட் மாஸ்டர் 24 மணி நேரமும் என்னை கவனித்துக்கொண்டே இருந்தார். அது எனக்கு ஒரு மாதிரியா இருக்கு என்று ராபர்ட் மாஸ்டரை நினைத்து உருகி பேசியுள்ளார்.
அடுத்து பிக்பாஸ் வீட்டில் தலைவர் தேர்ந்தெடுக்கும் போட்டி இடம்பெறுகின்றது.அதில் அசீம் ஷவின் விக்ரமன் ஆகியோர் பங்கு பற்றி கொள்கிறார்.அதில் அசீம் வெற்றி பெற்றுக்கொள்கிறார்.வென்றவுடன் தனது அதிரடியை ஆரம்பித்தார். சமையல் டீமில் சமையல் தெரியாத ராம்குமார் உள்ளிட்ட ஆண்களை மட்டுமே சேர்த்து பிரித்தார்.
மற்ற அணிகளையும் அதே போன்று பிரித்தார். கேப்டன் ஆக பதவி ஏற்ற உடன் தனது அதிரடியை அசீம் தொடங்கினார். முதலில் ஒவ்வொருவருக்கும் டீம் பிரித்தவுடன் அவர்கள் வேலையை உடனடியாக செய்யும்படி கட்டளையிட்டார். மேலும் அவரவர்கள் செய்கிறார்களா என்று பின்னாலே நின்று வழிகாட்டிக் கொண்டிருந்தார். பின்னர் ஸ்டோர் ரூமில் இருந்து வரவழைக்கப்பட்ட பால் பாக்கெட், ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை சரியாக பிரித்து கொடுத்தார். பால் பாக்கெட்டுகளை அவர் பிரித்த விதம் இதுவரை 50 நாளில் பார்க்காத ஒன்றாக இருந்தது. அவருடைய கேப்டன்ஷிப்பின் ஆளுமையை அது காட்டியது.
மொத்த பால் பாக்கெட் களை எடுத்து ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்றாக பிரித்துக் கொடுத்தார். மீதம் இருந்த பால் பாக்கெட்களை நான்கு நான்கு பேருக்கு ஒரு பால் பாக்கெட் விகிதம் பிரித்து ஷேரிங் என்று வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்தார். அப்படியும் ஒன்று மீதம் இருந்தது. அத்தோடு அதை பொதுவாக்கி பிரிட்ஜில் வைக்க சொன்னார். பின்னர் ஆப்பிள்களை பிரித்து ஒவ்வொருத்தருக்கும் ஆப்பிள்களை அவரே விநியோகம் செய்தார். பின்னர் பொதுவாக இருக்கும் ஆப்பிள்களை ஃப்ரிட்ஜில் வைத்து எப்படி பிரித்துக் கொள்வது என்று கூறினார். தயிர் யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
எனினும் இடையில் சமையல் மற்ற வேலைகள் செய்பவர்களை போய் ஊக்கப்படுத்தினார். அவர்களுக்கு வேலையில் ஏதாவது பிரச்சனை இருந்தால் தான் வருவதாக தெரிவித்தார். சாப்பிடும் தட்டுகளை அவரவருக்கு பிரித்து பெயர் போட்டு அவரவர் சாப்பிட்ட தட்டுகள், கிளாஸ்களை அவரவரே கழுவ வேண்டும் என உத்தரவிட்டார். அத்தோடு மாலையில் பிரிட்ஜை திறந்து அதை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். பிரிட்ஜில் இருந்த ஏகப்பட்ட குப்பைகளை எடுத்து வெளியே போட்டார். ஒரு மோசமான விஷயம் என்னவென்றால் மூன்று நான்கு வாரத்துக்கு முன்பிருந்த ஸ்வீட் பேப்பர் சுற்றப்பட்டு உள்ளே வைக்கப்பட்டிருந்தது.
ஜனனி பாதி சாப்பிட்ட கேக் உள்ளே இருந்தது. யாரும் சாப்பிடாத மிச்சமான கேக் கொஞ்சம் உள்ளே வைக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படி பல விஷயங்கள் உள்ளே இருந்தது. ரச்சிதா அவருடைய தட்டை ஃப்ரிட்ஜ்ஜுக்குள் வைத்திருந்தார் வெள்ளையாவற்றையும் எடுக்க சொல்லி அசீம் தெரிவித்தார். பிரிட்ஜை சுத்தப்படுத்தும் பணியை பின்னர் கிளினிங் டீமிடம் ஒப்படைத்தார். முதல் நாள் அசீமின் நடவடிக்கையை முனங்கிகொண்டே டீம் மேட்ஸ் சகித்துக்கொண்டனர். ஆனால் போக போக மோதல் வெடிக்கும், இந்தவாரம் தரமான சம்பவம் இருக்கும்.
அத்தோடு ஓபின் நோமினேசன் நடந்தது.அதில் யார் மேல் முகத்தில் நோமினேசன் லிஸ்றில் வருபவர்கள் மீது முகத்தில் கிரீம் அப்பிக்கொண்டார்.இதில் அதிக வாக்குகளை பெற்றவர் ரச்சிதா.அதில் மைனா, ஜனனி, ரச்சிதா, குயின்சி, தனலட்சுமி மற்றும் கதிரவன் ஆகியோர் நாமினேட் ஆகி இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதுக்கு அப்புறம் இந்த வாரத்திற்கான டாஸ்க் இடம் பெற்றது.அதாவது பழங்குடியினர் மற்றும் ஏலியன்ஸ் என இரண்டு குழுக்கலா பிரிந்து விளையாட வேண்டும் என கூறப்படுகின்றது.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.
Listen News!