• Nov 17 2024

தனுஷ் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அந்த நாள்…நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

துள்ளுவதோ இளமை எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய தனுஷ் தற்போது பாலிவுட் ஹாலிவுட் என கலக்கி வருகின்றார்.இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாது இயக்குநர் ,தயாரிப்பாளர், பாடகர் ,பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர்.

முதல் படத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்த தனுஷ் அதைப்பற்றி கவலைப்படாது நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தார். எனினும் அதன் பலனாக காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையை கண்டேன், பொல்லாதவன், படிக்காதவன், ஆடுகளம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உச்சத்தை தொட்டுள்ளார்.

ஆடுகளம் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். மேலும் அசுரன் படத்திற்காகவும் தனது இரண்டாவது தேசிய விருதை பெற்றார் தனுஷ்.


இதைதொடர்ந்து சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல் படத்தின் மூலம் தயாரிப்பாளரான தனுஷ் பா.பாண்டி படத்தை இயக்கி இயக்குநராகவும் வெற்றி கண்டார்.

இந்நிலையில் தனுஷின் திரைவாழ்க்கையில் இன்று மறக்கமுடியாத நாள். ஏன்னென்றால் மே 10 2002 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் துள்ளுவதோ இளமை படம் வெளியானது. மேலும் திரையுலகிற்கு தனுஷ் ஹீரோவாக அடியெடுத்து வைத்த இந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

என்னதான் அப்படம் வெற்றிபெற்றாலும், தனுஷ் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் தனுஷ் திரைவாழ்க்கையில் இந்த நாளை மறக்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/3mI2KccPi4w

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement