விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிய சீரியல் தான் பாரதி கண்ணம்மா . அதனைத்தொடர்ந்து ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது பாரதி கண்ணம்மா 2 சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்த சீரியலில் வெண்பா என்னும் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஃபரினா ஆசாத் . இவருடைய நடிப்பிற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இது தவிர இவர் ஷு தமிழில் ஒளிபரப்பாகிய நாச்சியார்புரம் என்னும் சீரியலில் நடித்து வந்தார்.இந்த சீரியலின் மூலமே பாரதி கண்ணம்மா சீரியல் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து தனது கணவருடன் மிஸ்டர் அன்ட் மிஸ் இஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்குபற்றி வருகின்றார்.
தற்போது தனது இன்ஸ்டாவில் முகத்தில் எரிந்த காயத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.உங்களுக்கு என்னாச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது பாரதி கண்ணம்மா 2 சீரியலுக்காக எடுக்கப்பட்ட சீன் .தற்போது இந்த எரிந்த மேக் அப்பில் தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!