• Sep 20 2024

நம்ம பிரியங்காவிற்கு என்ன ஆச்சு- இப்படி மாறீட்டாரே..திடீரென வைரலாகும் வீடியோ

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொகுப்பாளர்களில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்று இன்று வரை மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பு பெற்றவர் தான் பிரியங்கா.சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்டதுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து, கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ், ஸ்டார்ட் ம்யூசிக், தி வால் என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இன்று மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தபடி, மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக களமிறங்கினார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தலைகாட்டும் தொகுப்பாளினி பிரியங்கா, ரசிகர்களை கவரும்படி ஜாலியான வீடியோ அல்லது புகைப்படங்களை வெளியிடுவார்.

தொகுப்பாளினி பிரியங்கா விஜய் தொலைக்காட்சி திறந்தாலே அதிகம் வருவார்.இவர் தொலைக்காட்சியைக் கடந்து யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். சத்தமான சிரிப்புடன் கிண்டல் கேலிகளை செய்யும் இவர் மற்றவர்கள் தன்னை கிண்டல் செய்வதையும் ஜாலியாக எடுத்து பல்லாயிரக்கணக்கான மக்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் தான் ஆண் போல மீசை வைத்துக்கொண்டு I dont care என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.அதைப் பார்த்த ரசிகர்கள் காமெடியா நம்ம பிரியங்காவிற்கு  என்ன ஆச்சு என கேட்டு வருகிறார்.

இதோ அந்த வீடியோ..




Advertisement

Advertisement