• Nov 15 2024

ஷெரின்க்கு என்ன ஆச்சு... ஏன் இந்த திடீர் முடிவு..? குழப்பத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

2002-ஆம் ஆண்டில் வெளியான 'துள்ளுவதோ இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவரே நடிகை ஷெரின். இதன் பின்னர் 'விஷில், ஸ்டூடன்ட் நம்பர் 1, உற்சாகம்' ஆகிய படங்களிலும் நடித்திருக்கின்றார். அதனைத் தொடர்ந்து திரைத்துறையில் சிலகாலம் தலை காட்டாமல் இருந்த இவர் விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 இல் போட்டியாளர்களில் ஒருவராகப் பங்கேற்றிருந்தார்.


ஷெரின் வயதில் இருக்கும் பல நடிகர், நடிகைகளும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் இவர் உடற்பருமனைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில் மெலிந்து தற்போது அழகிய தோற்றத்தில் காட்சி அளிக்கின்றார். 



திரையுலகைத்தாண்டி இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருபவர். அதில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருவார். அத்தோடு படு ஓவரான உடையணிந்து தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியும் வருவார்.



இந்தநிலையில் இவர் தற்போது பாவாடை தாவணி அணிந்து குடும்பக் குத்து விளக்கு போன்று புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "ஏன் இந்த திடீர் முடிவு" எனக்கேட்டு தமது கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் எப்போதுமே ஷெரினின் கவர்ச்சிப் புகைப்படங்களை மட்டுமே பார்த்து வந்த ரசிகர்கள் இவரின் பாவாடை, தாவணி புகைப்படங்களை பார்த்து "இவருக்கு என்ன ஆச்சு" என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர். 

Advertisement

Advertisement