• Nov 19 2024

விஜய் தேவர் கொண்டாவிடம் 12மணி நேர திடீர் விசாரணை... நடந்தது என்ன..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ரசிகைகள் பலரதும் கனவுக் கன்னியாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா. இவர் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி வெற்றியால் இந்தியா முழுவதும் திரும்பி பார்க்க வைத்தவர். இதன் மூலமாக பான் இந்தியா கதாநாயகனாக உயர்ந்தார். 


அதுமட்டுமல்லாது சமீபகாலமாக இவர் தெலுங்கில் நடித்த படங்களை அனைத்து மொழிகளிலும் வெளியிடுகின்றனர். தமிழில் குறிப்பிட்டு சொல்லும் விதமாக 'நோட்டா' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அத்தோடு சமீபத்தில் வெளியான அவரது 'லைகர்' படம் தோல்வியைத் தழுவியது. 


அதாவது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா நடித்த படம் தான் லைகர். கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி ரிலீசான இப்படத்தை பூரி ஜெகன்நாத் உடன் இணைந்து நடிகை சார்மி தயாரித்து இருந்தார். 

மேலும் லைகர் படத்தை தயாரிக்க ஹவாலா பணம் முதலீடு செய்யப்பட்டதாக புகார் ஒன்று எழுந்தது. அதாவது லைகர் படத்தை தயாரிக்க சந்தேகத்திற்குரிய வழிகளில் தயாரிப்பாளருக்கு பணம் கிடைத்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் பக்கா ஜட்சன் புகார் அளித்திருந்தார். 


இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சர்மி ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர். இதன்தொடர்ச்சியாக நேற்று படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவும் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜாரானார். 

12 மணி நேர விசாரணைக்குப் பின் வெளியே வந்த அவர் கூறியதாவது, "பிரபலமானவராக இருப்பதால் சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும், சில பிரச்சனைகள் மற்றும் பக்க விளைவுகள் இருக்கும். இது ஒரு அனுபவம், இது தான் வாழ்க்கை. நான் என் கடமையை செய்தேன். நான் இங்கு வந்து அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தேன். அவர்கள் என்னை மீண்டும் அழைக்கவில்லை" என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement