• Nov 14 2024

2முறை கர்ப்பமாகி அபார்ஷன் பண்ணிய சங்கவி... உண்மையை வெளிப்படையாக கூறிய நடிகை... நடந்தது என்ன...?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

அமராவதி திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்தவர் நடிகை சங்கவி. இதன் பின்னர் விஜய்யுடன் இணைந்து ரசிகன் படத்திலும் நடித்திருந்தார்.


இவ்வாறாக தொடர்ந்து சினிமாவில் பிசியாக இருந்து வந்த சங்கவி ஐடி துறையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை கடந்த 2016-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். இதனையடுத்து 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். 

இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் தனக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது ஒரு குழந்தைக்கு தாயாக தான் பட்ட கஷ்டம் குறித்து பேசியிருக்கின்றார். அந்தவகையில் அவர் கூறுகையில் "நான் முதல் முறையாக கர்ப்பமானபோது 7 வாரம் வரை எந்த பிரச்சனையும் எனக்கு இல்லை. ஆனால் 7வது வாரத்தில் என்னை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தையின் இதயத்துடிப்பு நன்றாக இருக்கிறது எனக் கூறினார்.


பின்னர் எட்டாவது வாரத்தில் நான் செக்கப்புக்கு சென்றபோது குழந்தைக்கு இதயத்துடிப்பு இல்லை என்று கூறினார். இதையடுத்து அபார்ஷன் செய்ய வேண்டும் எனவும் சென்றார்கள். நான் செய்த காரியத்தால் தான் என் குழந்தை இப்படி இப்படி ஆகிவிட்டதோ என நினைத்து புலம்பினேன். 

அதாவது கர்ப்பமாக இருந்தபோது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அதற்கு சென்றதால் தான் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதோ என நினைத்து நினைத்துக் கவலைப்பட்டேன். நான் கர்ப்பமாக இருந்தபோது வேலை பார்த்திருக்கக் கூடாது என்று நினைத்தேன். 


அதன் பிறகு மீண்டும் நான் கர்ப்பமானேன். ஆனால் இந்த முறை எந்த வேலைக்கும் போகக் கூடாது என்று முடிவெடுத்து வீட்டிலேயே இருந்தேன். எந்த வேலையும் செய்யாது முழு ஓய்வில் இருந்தேன். இருந்த இடத்தில் இருந்து கொஞ்சமும் நகரவே இல்லை. அப்படி இருந்தும் எனது இரண்டாவது குழந்தைக்கும் பிரச்சனை ஏற்பட்டு அபார்ஷன் செய்ய வேண்டிய நிலைமை ஆகிவிட்டது. 

இவ்வாறு இரண்டு முறை அபார்ஷன் நடந்ததும் நொறுங்கிவிட்டேன். என் கணவர் தான் அந்த சமயத்தில் எனக்கு ஆறுதலாக இருந்தார் என்றார்" கலங்கிய கண்களுடன் கூறியுள்ளார் நடிகை சங்கவி.

Advertisement

Advertisement