தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராகக் கொடிகட்டிப் பறந்து வருபவர் நடிகர் சிம்பு. இவர் எந்தளவிற்கு தன்னுடைய திறமையை நடிப்பில் வெளிப்படுத்தி வருகின்றாரோ அந்தளவிற்கு பெண்களுடனான காதல் சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றமை வழமையான ஒன்றாகும்.
இதனைத் தொடர்ந்து கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தன்னுடைய மகன் சிலம்பரசனுக்கு ஒரு பெண்ணை பார்த்து, திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என அவரது தந்தை டி.ராஜேந்தர் போராடி பல இடங்களில் பெண் கேட்டு வருகின்றாராம்.
மேலும் சிம்பு சில நடிகைகளின் காதல் கிசுகிசுவில் சிக்கும் போதெல்லாம், தன்னுடைய மகனின் ஆசைப்படியே அவனின் திருமணம் நடக்கும் என அவர்களின் காதலிற்கு பச்சை கொடியும் காட்டியிருந்தார் ராஜேந்தர்.
அத்தோடு இறுதியாக ஹன்சிகாவின் காதல் வலையில் சிம்பு சிக்கிய போது, இவர்கள் இருவருக்கும் திருமணம் வரை பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தது. எனினும் திடீரென அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தத் திருமணமும் கைவிடப்பட்டது. பினஅதனைத் தொடர்ந்து ஹன்சிகா மீண்டும் நடிப்பதில் கவனத்தை செலுத்தத் தொடங்கி விட்டார்.
இவரைத் தொடர்ந்து நடிகர் சிம்புவும் தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து அடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்தநிலையில் தற்போது சிம்புவுக்கு 40 வயது கடந்து விட்டது.
இதனால் தன்னுடைய சமூகத்தைச் சேர்ந்த பலரும் பெண் கொடுக்காமையினால், உடனடியாக சிம்புவுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என சிம்புவின் பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.
இதன் காரணமாக டி ராஜேந்தர் தன்னுடைய சொந்த ஊரான மயிலாடுதுறையில் உள்ள உறவினர்கள் மற்றும் தன்னுடைய சமூக்கத்தைச் சேர்ந்தவர்களிடம் தன் மகனுக்கு பெண் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும் ஒரு துயரமான சம்பவம் என்னவெனில், அவரின் உறவினர்களில் சிலர் சிலம்பரசனின் வயதை குறிப்பிட்டு பெண் கொடுக்க மறுத்து விட்டதாகவும், இன்னும் சிலர் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு பெண் கொடுக்க தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறாக பலரும் சிம்புவுக்கு பெண் கொடுக்கத் தயங்கும் நிலையில் ராஜேந்தர் மற்றவர்கள் முன் அசிங்கப்பட்டு வருவதோடு கவலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Listen News!