ஹாலிவுட் திரையுலகில் முக்கிய தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜொனதன் மேஜர் மார்வெல். இவர் பல திரைப்படங்களில் காங் தி கான்கரர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.
இந்நிலையில் இவர் பெண் ஒருவரை தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நியூயார்க் நகரில் ஒரு பெண்ணிடம் இருந்து செல்போன் மூலம் கிடைத்த புகாரின் அடிப்படையில், அவர் அளித்த முகவரிக்கு சென்று ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தீவிர விசாரணையில் அது பிரபல நடிகர் ஜொனதன் மேஜர் என தெரிய வந்துள்ளது. அத்தோடு புகாரளித்த அந்த பெண்ணை குடும்ப தகராறில் ஜொனதன் மிகவும் கடுமையாக தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனையடுத்து கழுத்து மற்றும் தலையில் காயமடைந்த அந்த பெண்னை மீட்டு காவல்துறையினர் மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 33 வயதான நடிகர் ஜொனதன் கழுத்தை நெரித்தல், தாக்குதல் மற்றும் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இருப்பினும் தாக்குதலுக்கு ஆளான பெண்ணுக்கும், ஜொனதனுக்கும் என்ன உறவு என்பது தொடர்பான எந்த தகவலும் இதுவரை யாருக்கும் வெளியாகவில்லை.
மேலும் கைது செய்யப்பட்ட ஜொனதன் உடனடியாக அவரது வழக்கறிஞர் மூலம் ஜாமினில் எடுக்கப்பட்டார். அதுமட்டுமல்லாது ஜொனதன் மேஜர் எந்த தவறும் இழைக்கவில்லை எனவும், அவரது தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Listen News!