தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்து வந்த நடிகை தமன்னா இப்போது பாலிவுட் மற்றும் வெப்சீரிஸ்களில் கவனம் செலுத்துகிறார். தமிழில் ஜெயிலர் படத்திலும் நடித்திருக்கிறார். இவர் பிரபல நடிகர் விஜய் வர்மாவைக் காதலித்து வருகின்றார். அதனை இருவரும் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தனர்.
தான் மிகவும் மகிழ்ச்சியான இடத்தில் இருப்பதாக தமன்னா தெரிவித்திருந்தார். தமன்னா தனது கையில் மிகப்பெரிய வைர மோதிரம் ஒன்றை அணிந்திருக்கிறார்.அந்த வைரம் உலகின் 5வது பெரிய வைரமாகும். இந்த மோதிரத்தை அவரின் காதலன் வாங்கிக்கொடுக்கவில்லை. அவரும் வாங்கவில்லை.
நடிகர் ராம் சரண் மனைவி உபாசனா தமன்னாவிற்கு இந்த அளவுக்கு விலையுயர்ந்த பரிசைக் கொடுத்துள்ளார் என்று தகவல் வெளியானது. சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்தில் தனது மாமனார் சிரஞ்சீவியுடன் இணைந்து சிறப்பாக நடித்ததற்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் இது குறித்து தமன்னா தற்பொழுது கூறியுள்ளதாவது அது வைரமோதிரம் அல்ல வைர டிசைன் கொண்ட பாட்டில் ஓபன்னர் என்றும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் அப்போ இது வைர மோதிரம் என்று சொன்னது பொய்யான செய்தியா எனக்கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!