• Nov 10 2024

அதிரடியாக கைது செய்யப்பட்ட உதயம் தியேட்டர் உரிமையாளர்.. சிறையில் அடைக்க உத்தரவு.. பின்னணி என்ன..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா பைனான்சியர் போத்ரா என்பவர் கடந்த 2002 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளான முன்னாள் காங்கிரஸ் எம்பி இரா அன்பரசு மற்றும் அவரது மனைவி, உதயம் தியேட்டர் உரிமையாளராக இருந்த மணி ஆகியோரிடம் 35 லட்ச ரூபாய் பணத்தினைக் கடனாக கொடுத்து இருக்கின்றார்.


அந்தவகையில் இந்த பணத்தை வைத்து ஸ்ரீபெரும்புதூரில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் உதயம் இன்ஜினியரிங் கல்லூரி கட்டுவதற்காக வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்காததால், அவர் முன் தேதியிட்டு கொடுக்கப்பட்ட செக் வங்கியில் செலுத்தும் போது அது பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. 

இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 2015 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி அறக்கட்டளை நிர்வாகி முன்னாள் எம் பி ரா அன்பரசு மற்றும் அவரது மனைவி, உதயம் தியேட்டர் உரிமையாளராக இருந்த மணி ஆகியோருக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து உடனடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.


ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இறுதியில் உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததை அடுத்து, தண்டனை விதிக்கப்பட்டவர்களை கைது செய்ய உயர் நீதிமன்றத்தின் தரப்பில் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்பி இரா அன்பரசு மற்றும் அவரது மனைவி காலமானதால், உதயம் தியேட்டர் உரிமையாளராக இருந்த மணி என்பவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது கைது செய்து சிறையில் அடைக்க கீழ்ப்பாக்கம் காவல்துறைக்கு உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காததால், சினிமா பைனான்சியர் போத்ரா தரப்பில் போடப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கீழ்பாக்கம் துணை ஆணையர் கைது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவித்திருந்தது.


இந்த உத்தரவின் அடிப்படையில் மணியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அதுமட்டுமல்லாது செக் மோசடி வழக்கில்  முன்னாள் உதயம் திரையரங்கு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்  சினிமா பைனான்சியர் இடமும் பணம் வாங்கிய விவகாரத்தில் செக் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆனது திரையுலகில் அதிர்ச்சியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement