தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறியப்பட்டவர் தான் அட்லி. இதனைத் தொடர்ந்த தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல் ,பிகில் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார். இப்படங்கள் அனைத்தும் வசூலிலும் அள்ளிக் குவித்தது.
இதனைத் தொடர்ந்து ஹிந்தி நடிகரான ஷாருகானை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தை இயக்கும் வேலைகளில் கடந்த சில வருடங்களை செலவிட்டார். தட்டுத் தடுமாறி பல தடைகளைக் கடந்து ஆரம்பமான அந்தப் படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது.
'ஜவான்' எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படம் ஹிந்தி தவிர, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. அட்லி பொதுவாக பழைய தமிழ்ப் படங்களைக் காப்பியடித்துத்தான் படமெடுத்துள்ளார். ஆனால், 'ஜவான்' டைட்டில் டீசருக்கு பழைய தமிழ்ப் படம் பக்கம் போகவில்லை. புதிய தமிழ்ப் படம் பக்கம்தான் போயிருக்கிறார்.
நேற்று கமல்ஹாசன் நடித்து வெளியான 'விக்ரம்' படத்தின் டைட்டில் டீசரை 2020ம் ஆண்டு வெளியிட்டிருந்தார்கள். அதே கான்செப்ட்டில் தான் 'ஜவான்' டீசரை உருவாக்கி வெளியிட்டுள்ளார்கள். இரண்டு படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இரண்டு டீசர்களுக்கும் 6 வித்தியாசங்கள் என்னென்ன என்று இயக்குநர் அட்லி சொன்னால் நன்றாக இருக்கும் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!