• Nov 17 2024

கட்சியின் முக்கிய பதவியில் இருந்து திடீரென விலகிய கமல்.. காரணம் என்ன..? தீயாய் பரவும் தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி பல விருதுகளை வென்றிருக்கும் கமல்ஹாசன் அரசியலின் மீதுள்ள ஆர்வத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சி ஒன்றினைத் தொடங்கினார்.


அரசியலில் தீவிரம் காட்ட தொடங்கியதும் கமல்ஹாசன் சினிமாவில் நடிப்பதை சற்றுக் குறைத்துக் கொண்டார். இதனால் அவர் சினிமாவை விட்டு விலக உள்ளதாகவும் அந்த சமயத்தில் ஓர் தகவல் எழுந்தது. அதன் பின்னர் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனை எதிர்த்து போட்டியிட்ட கமல்ஹாசன் அத்தேர்தலில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். 


இந்தத் தோல்வியைத் தொடர்ந்து மனம்மாறிய கமல் மீண்டும் சினிமாவின் பக்கம் தனது கவனத்தை செலுத்த தொடங்கி உள்ளார். அந்தவகையில் இவர் நடித்த 'விக்ரம்' திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சினிமாவில் பிசியாக இருந்தாலும் தனது அரசியல் பணிகளையும் தொடர்ந்து கவனித்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தனது முழு ஆதரவை தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் அவர்களுக்காக வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார். 


இந்நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கமல்ஹாசன் விலகி உள்ளார். மேலும் அவருக்கு பதில் அருணாச்சலம் என்பவர் அந்த பதிவுக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

அதாவது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் மாநில நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் வழக்கறிஞர் ஆ.அருணாச்சலத்தை மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்படும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் என தன் வசம் இரண்டு பதவிகள் இருந்ததால் அதில் ஒன்றை பிறருக்கு வழங்க முடிவு செய்து கமல் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும்,. இருப்பினும் அவர் அக்கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement