• Sep 21 2024

சீரியலில் இருந்து திடீரென விலகிய 'எதிர்நீச்சல்' ஜான்சிராணி... இனி அவருக்குப் பதில் இவர் தான்... காரணம் என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி செம ஹிட்டடித்து வரும் ஒரு சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலில் பலரையும் கவர்ந்த கதாபாத்திரங்களில் ஒன்று தான் ஜான்சிராணி. இந்த கதாபாத்திரத்தை நிகழ்ச்சி தொகுப்பாளினியும், அயலி படத்தில் நடித்தவருமான நடிகை காயத்ரி கிருஷ்ணன் ஏற்று கச்சித்தமாக நடித்து வருகிறார்.


காயத்ரி எதிர்நீச்சல் சீரியலைத் தொடர்ந்து மேலும் ஒரு புது சீரியலில் நடிக்க கமிட்டாகி இருந்தார். அதாவது விஜய் டிவியில் அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பாக உள்ள 'கிழக்கு வாசல்' என்ற சீரியலில் எஸ்.ஏ சந்திரசேகர், ரேஷ்மா முரளிதரன், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் இணைந்து நடிகை காயத்ரியும் கமிட்டாகி இருந்தார்.


அந்த சீரியலின் உடைய பூஜை நிகழ்வில் கூட அவர் கலந்து கொண்டிருந்தார். ஆனால் தற்போது இந்த சீரியலில் இருந்து காயத்ரி விலகி இருக்கின்றார். மேலும் அவருக்கு பதிலாக சின்னத்திரை நடிகை தாரணி அவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது.


இந்த சீரியலில் இருந்து காயத்ரியின் விலகலுக்கு காரணம் கால்ஷீட் கொடுப்பதில் இருந்த பிரச்சினை தான் எனவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. 

Advertisement

Advertisement