• Sep 20 2024

ஒல்லி பெல்லியாக மாறியும்... விடாது ஒர்க்கவுட் செய்யும் லாஸ்லியா... காரணம் என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் லாஸ்லியா. இலங்கை செய்திவாசிப்பாளரான இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தார். 


அதுமட்டுமல்லாது அந்நிகழ்ச்சியில் கவின் உடன் லாஸ்லியா போட்ட காதல் டிராமா பலரையும் வெகுவாக ஈர்த்தது. ஆனால், அப்பாவின் கண்டிப்பான உத்தரவுக்கு பிறகு கவினை காதலிப்பதை அப்படியே விட்டு விட்டதாக சொன்ன லாஸ்லியா அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் கிடைத்த நிலையில், கோலிவுட்டில் ஹீரோயினாக மாறினார்.


அந்தவகையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமான 'பிரெண்ட்ஷிப்' என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை இவருக்கு பெற்றுக் கொடுக்கவில்லை.


இப்படத்தை தொடர்ந்து 'கூகுள் குட்டப்பா' எனும் படத்தில் லாஸ்லியா நடித்திருந்தார். இந்த இரு திரைப்படங்களும் லாஸ்லியாவிற்கு பேரையும் புகழையும் பெற்றுக் கொடுக்கவில்லை. இருப்பினும் மேலும் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.


படங்களில் மட்டுமல்லாது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றார். அந்த வகையில் தற்போது ஜிம்மில் தீவிரமாக ஒர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "ஏற்கெனவே நன்றாக மெலிந்து விட்டீர்கள், மறுபடியும் எதற்காக உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்கிறீர்கள்" எனக் கேட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement