• Nov 10 2024

முன்னணி நடிகர், நடிகைகளின் உதவியாளர்கள் பெறும் சம்பள விபரம்... ஆத்தாடி அவங்களுக்கே இவ்வளவு தொகையா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்தவரையில் முன்னணி நடிகர் - நடிகைகள், ஒரு படத்தில் கமிட் ஆகும் போதே தங்களுடைய உதவியாளர்களான மேக்கப் மேன், டச் அப் மேன், ஹேர் ஸ்டைலிஸ்ட், காஸ்டியூம் டிசைனர், பவுன்சர், போன்றவர்களின் சம்பளத்தையும் தயாரிப்பாளர் தரப்பினர் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்துத் தான் படத்தில் நடிக்க கையெழுத்து போடுகிறார்கள். 


இதன் காரணமாக நடிகர், நடிகைகளின் சம்பள பணத்தை தவிர தயாரிப்பாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் செலவு ஏற்படுகின்றது. இந்த விடயம் தான் தற்போது கோலிவுட் திரையுலகில் பேசுபொருளாக ஆரம்பித்து விவாத பொருளாக மாறியுள்ளது.

இது போன்ற சில சில பிரச்சனைகளை முன்னிறுத்தித் தான், சமீபத்தில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

இதே முறையை பின்பற்றி தமிழிலும் உதவியாளர்களின் தொகையை நடிகர், நடிகைகள் தான் ஏற்றுக்  வேண்டும் என்ற நடைமுறையை கொண்டுவர வேண்டும் என்ற விடயத்தை முன்னுறுத்தி தயாரிப்பாளர்கள் தற்போது முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கான காரணம் யாதெனில் நடிகர் நடிகைகளின் உதவியாளர்களுக்கு ஒரு நாளைக்கு மட்டும் ஆயிரக்கணக்கில் செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய மேக்கப் மேன், ஹேர் ஸ்டைலிஸ்ட்,  டச் அப் பாய், போன்ற அனைவருக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு மட்டும் 80 ஆயிரம் ரூபாய் பெறுகிறார். இதே போன்று நயன்தாரா தனது உதவியாளர்களுக்கு 65 ஆயிரம் ரூபாயும், சமந்தா, ராசி கண்ணா ஆகியோரின் உதவியாளர்களுக்கு 60 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. 


அத்தோடு கீர்த்தி சுரேஷ் உதவியாளர்களுக்கு 55 ஆயிரம் ரூபாயும், த்ரிஷா உதவியாளர்களுக்கு 35 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் சிம்பு சுமார் 21 உதவியாளர்களுடன் 'பத்து தல' படப்பிடிப்புக்கு வருகை தந்ததாகவும், அவர்களுக்கு மட்டும் ரூபாய் 80 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உதவியாளர்களுக்கு, 75 ஆயிரம் ரூபாயும், தனுஷ் உதவியாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், விஜய்யின் உதவியாளருக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாது சூர்யா, கார்த்தி, விக்ரம், சிவகார்த்திகேயன், விஷால், ஆகியோர் தங்களுடைய மேக்கப் மேன் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே ரூபாய் 15 ஆயிரம் வரை பெற்றுக் கொள்வதாகவும் கூறப்படுகின்றது.

இவர்களை போன்றே சமுத்திரகனி உதவியாளருக்கு 35 ஆயிரம் ரூபாயும், அதர்வா உதவியாளருக்கு 27 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக வழங்கபட்டு வருகிறது.

மேலும் தல அஜித் 'வலிமை' படத்துடன் தன்னுடைய உதவியாளரை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. அதுவரை இருந்த தன்னுடைய உதவியாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக பெற்றுக் கொடுத்துள்ளார். எனினும் தற்போது நடித்து வரும் ஏகே 61-ஆவது படத்தில் படக்குழுவினர் நியமித்த உதவியாளரையே இவர் பயன்படுத்துவதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது.

உதவியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சம்பளம் ஒரு புறம் இருக்க நடிகர் - நடிகைகள் மிகவும் தனித்துவமான ஆடைகளையே தங்களுடைய படங்களில் அணிந்து கொள்ள விருப்பம் தெரிவிப்பதால், காஸ்டியூம் டிசைனருக்காக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து சுமார்10 முதல் 20 லட்சம் வரை செலவு செய்யப்படுவதாகவும் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement