• Nov 10 2024

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் என்ன தான் கதை..? வெளியான திரை விமர்சனம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக திகழும் சிம்புவின் வெந்து தணிந்த காடு திரைப்படம் இன்று பிரமாண்ட ரீதியில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.இந்நிலையில் இப் படத்தின் மீது மாபெரும் அளவில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். அத்தகைய எதிர்பார்ப்பை வெந்து தணிந்தது காடு திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்ப்போம்...


ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு இடையே வெளியாகியுள்ள  வெந்து தணிந்த காடு திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி உள்ளார். சித்தி இத்னானி  நாகியாக நடிக்க ராதிகா சரத்குமார் நாயகனுக்கு அம்மாவாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான்  இசையமைக்க  ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.



படத்தின் கதைக்களம் :

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞரான முத்துவீரன் (சிம்பு) சொந்த ஊரில் இருந்து மும்பைக்கு பிழைக்க வருகிறார்.மேலும் அவர் வந்த இடத்தில் இவரை சுத்தி பல விஷயங்கள் நடக்கிறது. அதில் இவர் ரௌடி கும்பலிடம் சிக்கி தப்ப முடியாத அளவிற்கு சிக்கி கொள்கிறார்,இதன் பின்னர் இதனை முத்துவீரன் எப்படி சமாளித்து கடந்து அந்த ஏரியாவில் டான் ஆகிறார் என்பது தான் இந்த படத்தின்  மீதிக்கதையாக அமைகின்றது.

படத்தைப் பற்றிய அலசல் :

நடிகர் சிம்பு முத்துவீரன் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். அவருடைய நடிப்பு படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. எமோஷனல் காட்சிகளில் நம்மை மீறி கண்கலங்க வைக்கிறார்.

அத்தோடு பாவை என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ள சித்தி இதானி அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சிம்புவுக்கும் அவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகி உள்ளது.



ராதிகா சரத்குமார் சிம்புவின் அம்மாவாக எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார்.அத்தோடு  முரட்டு வில்லனாக நடிப்பை கொடுத்துள்ளார் நீரவ் மாதவ்.

ஏ ஆர் ரகுமானின் இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. அத்தோடு ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுக்க எடிட்டிங் கனகச்சிதம்.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதைக்களம்

2. நடிகர், நடிகைகளின் நடிப்பு

3. இசை

4. இயக்கம்

தம்ப்ஸ் டவுன் :

தம்ப்ஸ் டவுன் :

1. மெதுவாக நகரும் கதை

2. சில இடங்களில் பொறுமையை சோதிக்கிறது.

Advertisement

Advertisement