• Nov 10 2024

இனியா கோபப்பட்டதால் ஈஸ்வரி செய்த காரியம்- பாக்கியா கொடுத்த பதிலடி- குழப்பத்தில் இருக்கும் ராமமூர்த்தி-Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பழனிச்சாமியின் அம்மா பழனியிடம் நீ இன்னும் இத்தனை நாளாக தனியாகவே இருப்ப, பாக்கியா வீட்டுக்குச் சென்று பொண்ணு கேட்கவா என்று சொல்ல பழனிச்சாமி நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாவே இருந்திட்டு போகின்றோம். நீ தேவையில்லாத எதையும் யோசிச்சு உன்னையே குழப்பிக் கொள்ளாத என்று சொல்கின்றார்.

தொடர்ந்து வீட்டில் இனியா போன் பார்த்திட்டு இருக்கும் போது,ஈஸ்வரி போனை அதிகம் பார்க்காத போனைக் கொடு என்று சொல்லும் போது இனியா கோபப்படுகின்றார். இதனால் ஈஸ்வரி உனக்கு கோபம் வருவதற்கு காரணம் மூச்சுப் பயிற்சி செய்யாதது தான் என்று சொல்லி இனியாவை மூச்சுப் பயிற்சி செய்ய வைக்கின்றார்.


ஈஸ்வரியின் இந்த செயலைப் பார்த்து ராமமூர்த்தி,அமிர்தா,ஜெனி ஆகியோர் அதிர்ச்சியடைகின்றனர்.அத்தோடு சமைத்துக் கொண்டிருந்த அமிர்தா கரண்டியை கீழே போட்டதைப் பார்த்து ஈஸ்வரி கோபப்பட ராமமூர்த்தி நக்கலடிக்கின்றார். அடுத்து பவுடர் ஒன்றைக் கொடுத்து இதை போட்டு கசாயம் எடுத்திட்டு வரச் சொல்லி எல்லோரையும் குடிக்க வைக்கின்றார். இனியா போன் தரலனாலும் பரவாயில்லை. கயாசம் மட்டும் வேண்டாம் என்று உள்ளே எழும்பி சென்று விடுகின்றார்.

தொடர்ந்து வீட்டிற்கு பாக்கியா வந்ததும் வீட்டில் நடந்தவற்றையெல்லாம் அமிர்தாவும் ஜெனியும் சொல்ல, பாக்கியா அதிர்ச்சியடைகின்றார். பின்னர் துாங்குவதற்காக பாக்கியா ரூமுக்குள் இருக்கும் போது இனியா காலேஜை விடலாம் தானே எல்லோருடைய கனவும் நிறைவேறுவதில்லை. தானே என்று அட்வைஸ்ட் பண்ண பாக்கியா இது நீயாக பேசல யாரோ சொல்லிக் கொடுத்திருக்கிறாங்க என்று சொல்ல இனியா டாடி தான்மா சொன்னாரு என்று சொல்கின்றார்.


அதற்கு பாக்கியா நான் காலேஜிற்கு போற கனவை விடனும் என்று சொல்லுறாரே, அவரு ராதிகாவை காலேஜில லவ் பண்ணினாரு, அந்தக் கனவை இப்போ எல்லோரையும் எதிர்த்து நிறைவேற்றி இருக்காரு தானே, அவரு தன்னுடைய பொறுப்பை உணர்ந்திருந்தால் இப்பிடி எல்லாம் பண்ணியிருப்பாரா என்று கேட்கிறார். இதனால் இனியா யோசிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement