• Sep 20 2024

லிப்கிஸ் காட்சி-கடைசியில் சிம்பு நடிகைக்கு செய்த விஷயம்.. இயக்குநர் உடைத்த உண்மை

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் என்று அறிமுகமானாலும் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகிய மாநாடு திரைப்படம் இவருடைய கெரியரில் திருப்பு முனையாக அமைந்தது.

சிலம்பரசன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கவுதம் மேனன் - சிம்பு கூட்டணியில் இது மூன்றாவது திரைப்படமாகும்.



இவ்வாறுஇருக்கையில் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் கவுதம் மேனன் சிம்பு கூட்டணியின் மூன்றாவது வெற்றியை உறுதிசெய்துள்ளது என்று தான் கூற வேண்டும் வசூல் ரீதியாகவும் கிட்டத்தட்ட ரூ. 50 கோடியை கடந்துள்ளது.



மேலும் இப்படத்தில் இடம்பெறும், ' உன்ன நினைச்சதும் ' பாடலில் நடிகை சித்தி இதானிக்கு நடிகர் சிம்பு லிப் கிஸ் கொடுப்பது போல் காட்சியை வைத்திருந்தாராம் இயக்குநர் கவுதம் மேனன்.

ஆனால், முத்த காட்சி வேண்டாம் என்று நடிகர் சிம்பு சொல்லிவிட்டாராம்.அதனால், அந்த காட்சியை அவர்களுக்கு பின்னால் இருந்து எடுத்தோம் என்று கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement