பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் கிசி கா பாய் கிசி கி ஜான் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற 21ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படமானது தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் இந்தி ரீமேக்காகும்.இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், சல்மான் கான், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த ட்ரெய்லரில் சல்மான் கான் வழக்கம் போல தனது சிக்ஸ் பேக்கை காட்டி வில்லன்களை வெளுத்து வாங்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதனை பார்த்த ரசிகர்கள் சல்மான் கானின் சிக்ஸ் பேக் கிராபிக்ஸ் செய்யப்பட்டதை போல இருப்பதாக கமெண்ட்ஸ் அடித்தனர்.
சல்மான் கான் மேடையில் ஏறியபோதும் இந்த கமெண்ட்ஸ் வந்துகொண்டே இருந்தது. இதனால், மேடையிலேயே தனது சட்டையை கழற்றி மாஸ் காட்டினார் சல்மான் கான். தனது சிக்ஸ் பேக் கிராபிக்ஸ் இல்லை என்பதை காட்டுவதற்காக, மேடையிலேயே சல்மான் கான் இப்படி செய்ததை ரசிகர்கள் எதிர்பார்க்கவே இல்லை. முக்கியமாக மேடையில் இருந்த பூஜா ஹெக்டே மிரண்டே போய்விட்டார்.
ஒருபக்கம் பூஜா ஹெக்டே, இன்னொரு பக்கம் கிருத்தி சனோன் நின்றுகொண்டிருக்க, நடுவில் இருந்த சல்மான் கான் சட்டையை கழற்றியது ரசிகர்களுக்கே ஜெர்க் கொடுத்தது. லைட்டாக சட்டையை விலக்கி தனது சிக்ஸ் பேக் உடலை காட்டி கெத்து காட்டினார் சல்மான் கான். தான் நடிக்கும் படங்களில் கண்டிப்பாக ஒரு காட்சியிலாவது சட்டை இல்லாமல் வந்துவிடுவது சல்மான் கான் வழக்கம். ஆனால், தற்போது அதனை மேடையிலேயே அரங்கேற்றிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!