தென்னிந்திய சினிமாவில் முன்னணிப் பிரபலங்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். கேப்டன் விஜயகாந்த் என ரசிகர்களால் போற்றப்படும் இவர் சிறந்த அரசியல் தலைவரும் கூட. இவர் தனது கம்பீரமான நடிப்பினால் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்தவர்.
விஜயகாந்த் பற்றி பலருக்குத் தெரியாத விடயங்களும் உண்டு. தன்னை நாடி வருபவர்களுக்கு தன்னால் முடிந்த பல உதவிகளைச் செய்யும் நல்ல மனமும் இவருக்கு உண்டு. சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் இன்று சினிமாவில் பிரபலங்களாக ஜொலிக்கும் பல நடிகர்கள் முன்னுக்கு வருவதற்கு கூட காரணமாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த்.
இந்நிலையில் நடிகர் பாஸ்கி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்"எனது சினிமா வாழ்க்கையை காப்பாற்றியது விஜயகாந்த் தான்" எனத் தெரிவித்திருந்தார். அதாவது கிரிக்கெட் வீரராக ஆரம்பத்தில் பணியாற்றியுள்ள இவர் வர்ணனையுடன் கலாய்ப்பதில் கை தேர்ந்தவர். இயல்பாகவே கிண்டலாகப் பேசக்கூடிய திறமை இவருக்கு உண்டு,
இந்நிலையில் நடிகர் பாஸ்கி முன்னணி சேனல் ஒன்றில் திரைப்படங்களைப் பற்றி விமர்சித்து வந்தார். இவருடைய நக்கலான பேச்சைக் கேட்டு பலரும் இவர் மீது கோபத்தில் இருந்தனர். இதன் காரணமாக சினிமாவில் இவரை நடிக்கக் கூடாது என ரெட்கார்ட் தடை போட்டிருந்தனர்.
இதற்கு அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த் இதுபற்றி குறிப்பிடுகையில் "ஒரு தனி நபரைப் பற்றி பேசினால் தான் தப்பு, சினிமாவில் அல்லது சினிமாவில் வரும் கதாபாத்திரங்களைக் கேலி செய்தால் அதில் ஒன்றும் தப்பில்லை" எனப் பாஸ்கிக்கு சார்பாகப் பேசியிருந்தார்.
இதனால் பாஸ்கி மீண்டும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இச்சம்பவத்தை மையமாக வைத்தே பாஸ்கி சினிமாவில் தனக்கு வாழ்வு தந்தது நடிகர் விஜயகாந்த் தான் என இன்றும் அவரை புகழ்ந்து வருகின்றார்.
பிற செய்திகள்
- உதட்டில் முத்தம் கொடுக்க போகும் காஜல்-அவரே வெளியிட்ட புகைப்படம்..!
- மீண்டும் பாடலாசிரியராக அவதாரம் எடுக்கும் நம்ம சிவகார்த்திகேயன்- எந்த படத்திற்கு தெரியுமா..?
- “அது என் 18 வருஷ கனவு…” மனம் திறந்து பல விசயங்களை பேசிய நடிகர் ஜெய்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!