நடிகை சனம் ஷெட்டி ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடலிங் துறையில் இருப்பவர். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் முக்கியமாக பணியாற்றியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி ஷங்கர் இயக்கத்தில் அம்புலி திரைப்படத்தின் மூலம் தனது தமிழ் திரையுலக பயணத்தை ஆரம்பித்தார்.மாயை, தொட்டால் விடாது, விலாசம் என 10 க்கும் மேற்பட்ட சிறு பட்ஜெட் படங்கள் இவர் நடித்துள்ளார் .
பல படங்கள் நடித்திருந்தாலும் நடிகை சனம் என்று சொன்னால் திரையுலகில் இவர் யார் என்று கேட்கும் அளவிற்கு இவரது படம் அமைந்தது.2020 ஆம் ஆண்டின் விஜய் டிவியின் புகழ் பெற்ற பிக் பாஸ் தொடரில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பிக் பாஸ்க்கு பின் இவரது புகழ் தமிழ் திரையுலகில் மிக பரபரப்பாக பேசப்பட்டது.ரசிகர்கள் ஏராளமானோர் இவருக்கு ஆதரவு கொடுத்தனர்.அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியும் அழகும் கலந்த போட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களை குசிப்படுத்துவார்.
இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ள போட்டோ ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
Listen News!