• Sep 20 2024

கமலின் விக்ரம் படத்திற்காக தொகுப்பாளினி DD செய்யவுள்ள விஷயம்-குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

‘மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தவர் லோகேஷ். இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலே ரசிகர்களிடத்தே விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற இவர், இரண்டாவது படமாக கார்த்தி நடிப்பில் ‘கைதி’ படத்தை இயக்கினார். விஜய்யின் ‘பிகில்’ படத்துடன் நேரடியாக மோதிய இந்தப்படம் லோகேஷின் தனித்துவமான இயக்கத்தால் மெஹா ஹிட் அடித்தது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் அவர் நடிப்பில் ‘விக்ரம்’ படத்தை இயக்கியுள்ளார்.

கமலுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட சிறந்த நடிகர்கள் நடித்துள்ளதால் கோலிவுட் திரையுலகமே இப்படத்தை எதிர்பார்த்துள்ளது.

அதுமட்டுமின்றி சமீபத்தில் கூட இப்படத்தில் நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. கிட்டத்தட்ட அந்த தகவல்கள் உண்மையெனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று விக்ரம் படத்தில் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா நடக்கவுள்ளது, இதற்காக அனைத்து ரசிகர்களும் வெறித்தனமாக காத்து கொண்டு இருக்கின்றனர்.

தற்போது விக்ரம் பட விழாவை பிரபல தொகுப்பாளர் DD தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இதனை DD-யே அவரின் சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

https://www.youtube.com/embed/wvRxMVKsd6o

Advertisement

Advertisement