விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பல பிரபலங்கள் தற்போது தங்களது வெற்றி திரைப்பயணத்தை நடத்தி வருகின்றனர். அப்படி அறிமுகமானவர் காமெடி நடிகர் யோகி பாபு.
ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி வந்த இவர், சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் அமீர் நடிப்பில் வெளியான யோகி படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். மேலும் பாபு என்ற இவரது பெயர் அதன் காரணமாகவே யோகி பாபு என மாறியது.
இதனை அடுத்து தில்லாலங்கடி, பையா, வேலாயுதம், ராஜபாட்டை, கலகலப்பு, அட்டகத்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பிரபல முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மான் கராத்தே, வீரம், ஐ, காக்கி சட்டை, காக்க முட்டை, ஜாக்சன் துரை, குற்றமே தண்டனை, ரெமோ, மெர்சல், கோலமாவு கோகிலா, சர்க்கார், அயோக்கியா, கோமாளி, தர்பார், அரண்மனை 3, பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மண்டேலா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் கதாநாயகனாக நடித்து அசத்தி இருந்தார்.
எனினும் தற்போது, 10திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் மற்றும் அஜித் குறித்து அவர் பேசிய பேட்டி வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் சர்க்கார் ஷூட்டிங் முடித்து விஸ்வாசம் ஷூட்டிங் வந்த போது, விஜய் குறித்து அஜித் பேசியதாக தெரிவித்துள்ளார். அப்போது, அஜித் ஒருமுறை, சர்க்கார் ஷூட்டிங் முடித்து வந்த போது, விஜய் எப்படி இருக்காரு என விசாரித்ததாக தெரிவித்துள்ளார். அதே போல, அஜித்தும் விஜய் குறித்து விசாரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்
- ஆசைகாட்டி மோசடி புகாரில் சிக்கிய கிரண்-நடந்தது என்ன..?
- இதில் நடிப்பதற்கு மட்டும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதி !
- 48 வயது நடிகைக்கு நடந்த சம்பவம்-பகீர் அளிக்கும் பேட்டி- நடந்தது என்ன..?
- உண்மைகளை போட்டு உடைத்த பாக்கியா… ஈஸ்வரி சொன்ன வார்த்தை – இன்றைய எபிசோட் அப்டேட்
- கலங்கி நிற்கும் கண்ணம்மா-கடைசியில் நடந்த சம்பவம்- இன்றைய எபிசோடு அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!