தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் சிம்பு. இவரின் கெரியரை கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என இரண்டு வகையாகப் பிரித்து விடலாம். ஏனெனில் அந்தளவுக்கு அவரின் வாழ்க்கை டோட்டலாக மாறி உள்ளது.
அதாவது கொரோனா ஊரடங்குக்கு முன்பு வரை உடல் எடை அதிகரித்து கைவசம் பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் தவித்து வந்த சிம்பு, கொரோனா ஊரடங்கு சமயத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து ரொம்பவே ஸ்லிம் ஆனார். அதன்பின் அவருக்கு பட வாய்ப்புக்கள் வந்து குவியத் தொடங்கின.
அந்தவகையில் 'மாநாடு' மற்றும் 'வெந்து தணிந்தது காடு' என அடுத்தடுத்து பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து வந்த சிம்பு, தற்போது ஒபிலி கிருஷ்ணா இயக்கும் 'பத்து தல' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதன்பின் கொரோனா குமார் படத்தில் அவர் இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சிம்புவோ யாருமே எதிர்பார்க்காத வகையில் 'பத்து தல' படத்தின் ஷூட்டிங்கை முடித்ததும் வெளிநாடு ஒன்றிற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளாராம். அங்கு சில நாட்கள் தங்கி ஓய்வெடுத்துவிட்டு தன் அடுத்த பட பணிகளை மீண்டும் தொடங்க உள்ளாராம்.
ஆனால் இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் அவரது அடுத்த படம் கொரோனா குமார் இல்லை என்று திட்டவட்டமாக கூறப்படுகிறது. அந்தவகையில் சுதா கொங்கரா அல்லது ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரில் ஒருவர் தான் சிம்புவின் அடுத்த பட இயக்குநராக பெரும்பாலும் இருப்பார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா குமார் படத்தை சிம்பு கைவிடும் முடிவுக்கு வந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது. அதாவது 'இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் இயக்குநரான கோகுல் வித்தியாசமான கதையம்சத்துடன் இயக்க இருந்த இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளதாக கடந்தாண்டே அறிவிப்பு வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Listen News!