லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு விக்ரம் திரைப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் அடித்த நிலையில், லோகேஷ் இயக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இதுவும் தளபதியுடன் மீண்டும் இணையப்போவதாக தகவல் பரவியதால், தளபதி 67 திரைப்படம் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
இதையடுத்து கடந்த வாரம் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டை ரசிகர்களே போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு திணற திணற அடுத்தடுத்து வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம். இப்படத்தில், விஜய், திரிஷா, அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், மேத்தீவ் தாமஸ், மிஷ்கின் ஆகியோர் நடித்து வருகின்றனர். நடிகை திரிஷா திட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.
இப்படம் அக்டோபர் 19ந் தேதி வெளியாக உள்ளது.அனைத்து அப்டேட்டுகளையும் அடுத்தடுத்து அறிவித்து விட்டு, இனி அப்டேட்டுனு கேட்டா அவ்வளவுதான் என்பது போல லியோ படக்குழு விறுவிறுப்பாக ஷூட்டிங்கை நடத்தி வருகிறது. இதையடுத்து காஷ்மீரில் நடைபெற்று வரும் லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை லோகேஷ் ஷேர் செய்திருந்தார்.
அந்த போட்டோவில் தீ கொளுத்துவிட்டு எரிய, அதனை சுற்றி லோகேஷ், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் ப்ரதர்ஸ், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ் ஆகியோர் இருந்தனர்.இந்நிலையில், இன்று லியோ படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோ லீக்காகி உள்ளது. அந்த வீடியோவில் விஜய் நடந்து வருகிறார் அவரை சுற்றி பலர் நடந்து வருகின்றர்.
8 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ ஷேரான சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டுவிட்டாலும், அந்த வீடியோ டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது. இதனால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து தளபதி விஜயின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களோ, வீடியோக்களோ வெளியாகிவிட்டால், எந்த விதமான எச்சரிக்கையும் இன்றி உடனடியாக அவை நீக்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும், இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருக்க படப்பிடிப்பு தளத்தில் யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கூறப்படுகிறது.
Listen News!