தமிழ் சினிமாவில் நடிப்பின் ராட்சனகாக விளங்கும் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் செல்வராகவன். அதனைத் தொடர்ந்து 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்' போன்ற மாஸ்டர் பீஸ் படங்களைக் கொடுத்தார்
இது தவிர பல திரைப்படங்களை இயக்கி வந்த இவர் தனுஷை வைத்து நானே வருவேன்' படத்தில் இயக்கி முடித்துள்ளார். இயக்குநராக இருக்கும் இவர் நடிகராகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கின்றார். அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அத்தோடு கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணிக்காயிதம் என்னும் படத்திலும் கதாநாயகனாக நடித்து அசத்தியுள்ளார். பின்பு மோகன்.ஜி இயக்கும் 'பகாசூரன்' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தனது டுவிட்டர் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் செல்வராகவன் அடிக்கடி நம்பிக்கையூட்டும் கருத்துகளை பதிவிட்டு வருவார்.
அந்த வகையில் தற்போது ஒரு கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "நாம் செய்ய நினைப்பதை இன்னொருவர் செய்யலாம். நம் கனவை இன்னொருவர் வாழலாம். அதைப் பார்த்து பொறாமைப் பட்டு ஏக்கத்திலேயே காலம் தள்ளக்கூடாது. நம் கையில் இருப்பது ஊசியில் நூல் கோர்க்கும் வேலை என்றாலும் மனம் ஒன்றி திறம்பட செய்வோம். வெகு விரைவில் நம் கதவும் திறக்கும்." என குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்
- காளி போஸ்டருக்கு எதிராக கனடாவில் தொடங்கிய கண்டனம்- தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் இயக்குநர் லீனா
- பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி நடிக்கும் வந்தியத்தேவன் போஸ்டர் ரிலீஸ்
- 1000 கோடி ருபாய் பட்ஜெட்டில் சங்கரின் படம் -யார் ஹீரோ தெரியுமா..?
- விடுதியில் ஒன்றாக இருந்தது ஏன்? நரேஷ் பாபுவின் தொடர்பை பற்றி விளக்கிய நடிகை பவித்ரா!
- சூர்யாவின் இரண்டு சூப்பர்ஹிட் படங்களை மாதவன் நிராகரித்தாரா…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!