சன் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருந்த சீரியல் தான் எதிர்நீச்சல். தற்போது சீரியலில் கடந்த ஒரு மாத காலமாக குணசேகரன் கேரக்டருக்கு புதிதாக யார் வந்து நடிக்கப் போகிறார் என்று ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அந்தவகையில் குணசேகரன் கேரக்டருக்கு வேலராமமூர்த்தி மாஸ் என்ட்ரி கொடுத்து நடித்து வந்திருக்கிறார்.
இவருக்கான வரவேட்பு எல்லாம் பலமாகத்தான் இருந்தது ஆனால் போகப் போக ஒவ்வொரு நாளும் இந்த புது குணசேகரனின் நடவடிக்கைகள், பேச்சு, அடாவடித்தனமான வன்மம் இது எல்லாம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்து எரிச்சல் அடைய வைத்து வருகிறது.
இதனால் இதுவரை டிஆர்பில் டாப்பில் இருந்த எதிர்நீச்சல் சீரியல் கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்கு சென்று டிஆர்பி ரேட்டிங்கில் அடிப்பட தொடங்கிவிட்டது. முக்கியமாக இந்த புது குணசேகரன் அவருடைய கேரக்டரை மொத்தமாக சொதப்பியதால் நாடகத்திற்கு எதிர்மறையான கமெண்ட்ஸ்கள் வர ஆரம்பித்துவிட்டது.
இவர் நடிகர் மாரிமுத்து நடிப்புக்கு கொஞ்சம் கூட செட் ஆகவில்லை என்றும், இதுவரை அவர் சேர்த்து வைத்த மொத்த பேரையும் டேமேஜ் செய்யும் அளவிற்கு தான் இவருடைய நடிப்பு இருக்கிறது என்று பலரும் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள். அத்துடன் போகும் போது கதிர் மற்றும் ஞானத்திற்கு எந்த அளவிற்கு பெண்களை அடிமையாக வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு கொம்பு சீவி விட்டு குணசேகரன் போய்விட்டார். ஆக மொத்தத்தில் இப்போதைக்கு புது குணசேகரன் வரமாட்டார். இனி கதை தொடரில் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பாப்போம்.
Listen News!