விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.
அதில் வீட்டுப் பணிப்பெண் அபியிடம் "பாப்பா எங்க மேடம்" எனக் கேட்கின்றார். பதிலுக்கு அபி "டூருக்கு போய் இருக்கா.நாளைக்கு வந்திடுவா" என்கிறார். பதிலுக்கு பணிப்பெண் "டூருக்கு போகல மேடம் அவங்க சென்னையில் தான் பீச் ரூட்டில் ஜாலியாக சுத்திட்டு இருக்காங்க" என்கிறார்.
பதிலுக்கு கோபத்தில் பொங்கி எழுந்த அபி உங்களுக்கு இதெல்லாம் யார் சொன்னா எனக் கேட்டு கத்துகின்றார். அதற்கு பணிப்பெண் "அந்தப் பீச் வீட்டில் என் சொந்தக்காரர் தான் வாட்ச் மென் ஆக இருக்கார், போட்டோ எடுத்து அனுப்ப சொல்லட்டுமா" எனக் கேட்க அபியும் ஆம் என்கிறார்.
பின்னர் கண்மணிக்கு போன் பண்ணிய பணிப்பெண் அவர்களின் போட்டோ அனுப்பும்படி கேட்கின்றார். கண்மணியும் போட்டோ எடுத்து அனுப்புகின்றார். போட்டோவைப் பார்த்துக் கடுப்பான அபி உடனே விஜிக்கு கால் பண்ணுகின்றார். எங்கே இருக்கீங்க எனக் கேட்க கண்மணி ஜவ்வாத மலையில் என்கிறார்.
பதிலுக்கு அபி "ஜவ்வாத மலையில் எப்ப பீச் வந்தது, பொய் சொல்லுறீங்க, இப்ப நீங்க வாறீங்களா, இல்லென்னால் போலீஸைக் கூட்டிற்று நான் வரவா எனக் கேட்க, விஜி நாங்களே வாறம் என்கிறார்.
Listen News!