• Sep 21 2024

லோகேஷ் இயக்கவுள்ள தலைவர் 171 ஆவது படம் எப்படி இருக்கும்- ரஜினிகாந்த் கொடுத்த சூப்பர் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் ஜெயிலர். இப்படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது. இதனை அடுத்து இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இது இவருடைய 170வது படமாகும்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், காரில் சென்று கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் தலைவர் 171 ஆவது படம் எப்படி இருக்கும் என்கிற கேள்வியை முன் வைத்தனர். அதற்கு ரஜினிகாந்த் அளித்த பதில் வைரலாகி வருகின்றது.


இதற்கு ரஜினிகாந்த் வழக்கம்போல சிரித்து விட்டு, Definitely நல்லாத்தான் வரும் எனக்கு கூறிவிட்டு கிளம்பி விட்டார். தலைவர் 171 படம் குறித்து ரஜினிகாந்த் பேசிய லேட்டஸ்ட் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்தை வைத்து தரமான சம்பவத்தை செய்வார் என ரசிகர்கள் வெயிட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement