• Sep 20 2024

ரோல்ஸ் ரொய்ஸ் காரை வாங்கித் தந்திட்டு தயாரிப்பாளர் என்ன பண்ணுவாரு?- அப்போ கார் விஷயம் வதந்தியா?- அதிர்ச்சித் தகவலைக் கூறிய நெல்சன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் நெல்சன் திலீப்குமார்.அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை நெல்சன் இயக்கி இருந்தார்.இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார். இருப்பினும் இப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இந்த விமர்சனத்தை முறியடிக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் என்னும் படத்தை இயக்கியிருந்தார். ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான இப்படம் வசூலிலும் அள்ளிக் குவித்தது.


சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்ததோடு இப்படத்தின் ஒவ்வொரு பாடல்களும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. இப்படத்தில் நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் கிருஷ்னன், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், மோகன் லால், விநாயகம் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் இப்படத்தினை இயக்கிய இயக்குநர் நெல்சனுக்கு தயாரிப்பாளர் கலாநிதி... Porsche சொகுசு கார் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார். இந்த காரின் விலை சுமார் 1 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க இதற்கு முன்னதாக படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒரு இன்டர்வியூ கொடுத்திருந்தார் நெல்சன்.


அதில் உங்களுக்கு ரோல்ஸ் ரொய்ஸ் கார் ஒன்றினை தயாரிப்பாளர் தந்துள்ளாராமே என்று கேட்ட போது நெல்சன், தெரில அப்படி நானும் சோஷியல் மீடியாவில தான் பார்த்தேன்.இப்போதைக்கு வதந்தி தான் அது. ரோல்ஸ் ரொய்ஸ் காரை வாங்கிக் கொடுத்து விட்டு தயாரிப்பார் என்ன பண்ணுவாரு என்று நெல்சன் நக்கலாகக் கேட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement