• Sep 20 2024

பசுபதியை தாறுமாறாக அடிக்கும் விஜய்... அதிர்ச்சியில் உறைந்து போன காவேரி.. இனி நிகழப்போவது என்ன..? 'Mahanadhi' Promo Video..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி. இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 


அதில் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்த காவேரி குடும்பம் இருப்பதற்கு வாடகைக்கு வீடு தேடி ஒரு இடத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இவ்வளவு பெரிய வீடாக இருக்கிறதே என வியந்து கொண்டே அவர்கள் பார்த்த அந்த வீட்டிற்குள் நுழைகின்றனர்.


வீட்டுக்காரர் உங்களுக்கு வீடு பிடிச்சிருக்கா எனக் கேட்க காவேரி குடும்பமும் ஆம் எனக் கூறுகின்றனர். உடனே அந்த இடத்திற்கு வந்த பசுபதி "இவங்களுக்கு எல்லாம் வீடு வாடகைக்கு விடக்கூடாதுன்னு சொன்னேனா இல்லையா? அப்புறம் கொடுத்தால் என்ன அர்த்தம்" எனக் கேட்டு மிரட்டுகின்றார்.


பதிலுக்கு வீட்டு ஓனர் "இது என் வீடு முதலில கிளம்பு" என்கிறார். இதனையடுத்து பசுபதி கோபத்தில் வீட்டு ஓனரின் சட்டையைப் பிடித்து சண்டையிடுகின்றார். சத்தம் கேட்டு வெளியே வந்த விஜய் பசுபதியை தாறுமாறாக போட்டு அடிக்கின்றார். இதனைப் பார்த்த காவேரி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றார். 


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 


Advertisement

Advertisement